தற்போதைய கன்ஸ்யூமர் யுகத்தில் சமூக விழிப்புணர்ச்சி என்பது பிரபலமாகாத விஷயங்களை பிரபலப்படுத்துவதாக மட்டுமே மாறி நிற்கிறது. அடுத்தது புதுசா என்ன ? என்ன ? என்று தேடி உடனே சலித்து வாழும் மனோபாவத்தில் பரபரப்பானதே புதுமை.
சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ஒரே வாரத்தில் 2 லட்சம் ஹிட்டுக்களை அடைந்திருக்கிறது ஒரு இந்திய லெஸ்பியன் விளம்பரம். இந்தியாவின் முதல் லெஸ்பியன் விளம்பரம் இதுவே.
வருகை (The visit – தி விசிட்) என்று பெயரிடப்பட்ட இந்த விளம்பரம், சேர்ந்து தம்பதிகளாக வாழும் இரு இளம்பெண்கள், அவர்களில் ஒருவரின் பெற்றோரை சந்திக்க அழகான உடைகளணிந்து ரெடியாவது பற்றியது.
இறுதியில் ‘போல்ட் ஈஸ் பியூட்டிபுல்’ என்று முடியும் அந்த விளம்பரம் அநௌக் என்கிற உடைகள் தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டதாம்.
அவர்கள் ‘போல்டாக’ எடுத்த அந்தப் படத்தை 2 லட்சம் பேர் பரபரப்பாக பார்ப்பதன் அர்த்தம் இதுதான். ஒரு விஷயம் பாப்புலராக வேண்டுமெனில் அது த்ரில்லானதாக , யாரும் இதுவரை செய்யாததாக இருக்கவேண்டும். அது நல்லது அல்லது கெட்டது என்பது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.