ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் ஜி.டில்லிபாபு தயாரித்திருக்கும் ‘உறுமீன்’ படத்தில் பாபி சிம்ஹா நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரேஷ்மி மேனன் நடித்திருக்கிறார். இப்படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியிருக்கிறார். ‘மெட்ராஸ்’ கலையரசன் ஒரு முக்கிய வேடமொன்றில் நடித்திருக்கிறார். இவர்களுடன் அப்புக்குட்டி, மனோபாலா, காளி வெங்கட், சான்ட்ரா எமி, லுக்மேன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ரவீந்திரநாத் குரு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, அச்சு இசையமைத்திருக்கிறார்.
காடு, நகரம் என இரண்டு பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை நகர்கிறது. சமுதாயத்தில் உள்ள பல பிரச்சனைகளை உள்ளடக்கியதாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதே சமயம் படத்தில் ஃபேன்டசி விஷயங்களும் இருக்கின்றன. அதனால் இதை ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படம் என்றும் சொல்லலாம். செய்தித்தாள்களில் படிக்கிற, பார்க்கிற பல விஷயங்களும் இதில் இருக்கும்.
கார்ப்பரேட் கம்பெனிகள் எப்படி நம் நாட்டிற்கு வந்தன? அவற்றின் ஒரிஜினல் முகம் என்ன? இதுதான் த்ரில் கலந்து ‘உறுமீன்’ படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ‘உறுமீன்’ பாடல் வெளியீட்டு விழா ஜூலை 1ஆம் தேதி காலை 9 மணி அளவில் சத்யம் திரையரங்கில் நடைபெறவிருக்கிறது.
‘ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு’ எனும் பழமொழிதான் படத்தோட கான்செப்ட். வேகமாக வேட்டையாடற உயிரினம் சிறுத்தைன்னு நீங்க நினைச்சா அது தப்பு. ஒரே இடத்தில் நின்றபடியே வேகம் காட்டி வேட்டையாடுறது கொக்குதான்,’’ என்கிறார் இப்படத்தின்
இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி.
“பிசாசு, அரண்மனை, காஞ்சனா 2, டிமான்டி காலனி” போன்ற படங்களை வெளியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் ‘உறுமீன்’ படத்தையும் ரிலீஸ் செய்கிறது.