மத்திய அரசின் உயர்நிலைப் பள்ளிகளுக்கான கல்விக்குழு கடந்த மே 3 ஆம் தேதி மருத்துவ நுழைவுத்தேர்வில் அதிக அளவில் காப்பியடித்தல் நடந்த விஷயம் வெளியானது. 6 லட்சம் பேர் எழுதிய தேர்வில் பல மாணவர்கள் உடைகளினுள் பிட்டுகளை மறைத்து வைத்தும், உடையில் சிம்கார்டுகளை தைத்து வைத்து புளுடூத் இயர் போன்களை மாட்டிக் கொண்டும் நவீனமாக பிட் அடித்துள்ளனர்.

இதில் கோர்ட் தலையிட்டு தேர்வை செல்லாததாக அறிவித்து மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது. இவற்றையொட்டி மாணவ, மாணவிகளுக்கான புதிய உடைக்கொள்கையை சி.பி.எஸ்.ஈ அறிவித்துள்ளது.

அதன்படி வரும் ஜூலை 25ம் தேதி நடக்க இருக்கும் மறுதேர்வில் ‘தலைக்கு ஸ்கார்ப் எனப்படும் முக்காடு அணியக்கூடாது. அரைக்கை சட்டை தான் அணியவேண்டும், டைட்டான உடைகளை அணியவேண்டும், ஷூ அணியக்கூடாது’ என்பது போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மாணவர்கள் உடைகளுக்குள் செல்போன், பிட்டுகளை வைத்து காப்பியடிக்கக்கூடாது என்பதற்காக இப்படி கட்டுப்பாடு விதித்துள்ளதாக கல்விக் குழு சொன்னாலும் அவற்றில் சில இஸ்லாமியரின் உடைகளை குறிவைத்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடு போலத் தெரிகிறது.

இந்த கட்டுப்பாடுகளுக்கு சில இஸ்லாமிய அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. மஞ்லிஸ்-ஈ-முஷ்வராத் என்கிற அமைப்பு கூறுகையில் “இது மதச் சுதந்திரத்துக்கு எதிரானதாகும். இந்தக் கட்டுப்பாட்டினால் பல முஸ்லீம் குழந்தைகள் தேர்வு எழுத வரமுடியாமல் போகும்”.

Related Images: