ஸையோமி (Xiaomi) தனது புதிய மொபைல் போன் மை 4ஐ (Mi 4i) ஐ வெளியிட்டதைத் தொடர்ந்து அதில் உபயோகப்படுத்தக்கூடிய அதிகத் தரமுள்ள ஹெட்போன்களையும் அறிமுகம் செய்துள்ளது.
புதிய மை ஹெட்போன் மற்றும் மை உட்காது-ஹெட்போன்களை மார்க்கெட்டில் வெளியிட்டுள்ளது ஸையோமி. இதில் ஹெட்போனின் விலை 5499 ரூபாயாகவும் உட்காது ஹெட்போனின் விலை 1000 ரூபாயாகவும் இருக்கும்.
மை ஹெட்போனின் சிறப்பம்சம் அதிலிருக்கும் உறுதியான அதேசமயம் மெல்லிய டையப்ரம்(diaphragm) சவ்வு. 50mm அளவு பரப்புள்ள இது இரும்பைப் போல 4 மடங்கு லிமையானது, டைட்டானியம் உலோகத்தை விட 60 சதவீதம் லேசானது. மற்ற ஹெட்போன்களின் சவ்வுகளை விட 25 சதவீதம் பெரிய டையப்ரம் தெளிவான ஒலியையும், அடி ஒலியையும்(bass) தரக்கூடியது. இது 3டி சவுண்டை தரக்கூடியது. கருப்பு மற்றும் தங்க கலர்களில் இந்த ஹெட்போன் கிடைக்கிறது.
உட்காது ஹெட்போனின் விமானத் தொழில்நுட்ப உலோக டையப்ரம் ‘சாண்ட்விட்ச்’ டெக்னாலஜி எனப்படும் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தால் ஆனது. இதனுடைய கடத்தும் பாதையை காப்புரிமை பெற்ற ‘ஒலி அறை அமைப்பு’ ஒன்று இணைக்கிறது. இதனுள் ஒலி அலை சுழன்று செல்வதால் சிறப்பான ஒலியும், அடி ஒலியும் கிடைக்கிறது. இது ‘விண்வெளி கிரே’ கலரில் கிடைக்கிறது.