இன்டர்நெட்டில் இன்றைக்கு நாம் எதையாவது பற்றித் தேடி கண்டுபிடிக்கவேண்டுமென்றால் அதற்கு நாம் உபயோகப்படுத்துவது கூகுள்.காம்(google.com) என்கிற கூகுளின் தளம்.

இந்த ‘கூகுள் தேடுதளம்’ ‘கூகுள் பொறி’ எனப்படும் கூகுள் தேடும் என்ஜினை உபயோகப்படுத்தி உலகில் உள்ள எல்லா வெப்சைட்டுகளில் உள்ள வார்த்தைகளையும் சேகரித்து, பிரித்து, அடுக்கி அதிலிருந்து நாம் தேடும் பக்கத்தை எடுத்துக் கொடுக்கிறது.

உலகின் நம்பர் ஒன் தேடுதளமாக உள்ள கூகுள் தேடுதளத்தைவிட வேகமான என்ஜினை கண்டுபிடித்திருக்கிறார் கனடாவைச் சேர்ந்த அன்மோல் துக்கரேல் எனப்படும் இந்திய வம்சாவளிப் பையன். 16 ஏ வயதான இவர் கூகுளின் அறிவியல் கண்காட்சிக்காக செய்த ப்ராஜக்ட் தான் இந்த தேடுதல் என்ஜின்.

இந்த என்ஜின் கூகுள் என்ஜினை விட 41 சதவீதம் வேகமாகவும், 21 சதவீதம் அதிக துல்லியமாகவும் தகவல்களைத் தேடித்தரக்கூடியது. இதை பைதான் (python) என்னும் மொழியில் எழுதியிருக்கிறார். இதை வடிவமைக்க சிலமாதங்களும், செயல்படுத்த 60 மணிநேரம் அவருக்கு தேவைப்பட்டது. இந்த இன்ஜினை வெறும் ஒரு ஜி.பி சேமிப்பு வசதி கொண்ட கம்ப்யூட்டர் , இன்டர்னெட் மற்றும் கூகுளின் தளக்கருவிகள் போன்றவற்றைக் கொண்டே உருவாக்கிவிட்டிருக்கிறார்.

பத்தாவது வகுப்பு படித்து வரும் அன்மோல் இந்த என்ஜினை ப்ரௌசர் வரலாறு மற்றும் இடம் ஆகியவற்றையும் கணக்கில் கொள்வதன் மூலம் தேடப்படும் வார்த்தையைப் பற்றி மேலும் தெளிவான முடிவுகளை எளிதில் அடைவதாகச் சொல்கிறார்.

விரைவிலேயே கூகுள் சி.ஈ.ஓ. சுந்தர் பிச்சை உங்களை மீட்பண்ணினாலும் பண்ணுவாருங்கோ மிஸ்டர் அன்மோல் !

Related Images: