வேர்லட்- வைட்-வெப் எனப்படும் உலகளாவிய வலை (World Wide Web – www) தான் இன்று நாம் பேஸ்புக் வரை உபயோகப்படுத்தும் இன்டர்நெட் ராட்சசனாக வளர்ந்து நிற்கிறது. இந்த உலகளாவிய வலை 1991ல் ஆகஸ்ட் 6 அன்று பிறந்தது. இதன் பிதாமகர் டிம் பெர்னர்ஸ் லீ( Tim Berners-Lee) எனப்படும் கம்ப்யூட்டர் விஞ்ஞானி ஆவார்.
தற்போது அறுபது வயதாகும் லீ, செர்ன்(CERN) எனப்படும் ஐரோப்பிய அணு விஞ்ஞானிகளுக்கான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். உலகெங்கும் பல்வேறு நாடுகளிலிருக்கும் செர்ன் விஞ்ஞானிகள் தங்களுக்கிடையே கம்ப்யூட்டர்கள் மூலம் தொடர்பு கொள்ள, தகவல்களை பரிமாறிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு நெட்வொர்க் அமைப்பு தேவைப்பட்டது. அப்போது அவர் இதை வடிவமைத்தார்.
எந்த வடிவத்தில் தகவல்களைப் பரிமாறுவது என்று அவர்கள் யோசித்தபோது லீ கொடுத்த தீர்வு ‘வார்த்தைகள்’. தகவல்களை வெறும் வார்த்தைகளாகப் பரிமாறுவது என்பது எளிது. அவர் சமர்ப்பித்த திட்டத்தை அவரது மேலாளர் ‘சுமார் தான்’ என்றாலும் அங்கீகரித்தார். செர்ன் அத்தி்ட்டத்தை செயல்படுத்தியது.
1990 டிசம்பர் 20ம் தேதி முதல் வெப்சைட் உருவானது. அது வார்த்தைகள் மட்டுமே கொண்ட ஒரு பக்கம் அது. 1991 ஆகஸ்ட் 6 ஆம் தேதி இந்த நெட்வொர்க் பொதுமக்கள் உபயோகத்திற்காக திறக்கப்பட்டது. முதல் வெப்சைட்டை <a href=”http://info.cern.ch/hypertext/WWW/TheProject.html” target=”_blank”>இங்கே சென்று காணுங்கள்</a>.பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள டிம் பெர்னர்ஸ் லீ தற்போதும் வோர்ல்ட்-வைட்-கன்சார்ட்டியத்தின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.