” இன்றைய சமூகத்தில் நிலவும் ஒரு முக்கிய பிரச்சினை ஆன சமூக வளைத்தளங்களில் வரும் போலி அடையாளங்களைப் பற்றியக் கதை தான் ‘ஜிகினா’. இன்றைய வர்த்தக உலகத்தில் நிறம் என்பது தான் குணத்தையே நிர்ணயம் செய்யும் என்ற எண்ணத்தில் தான் பலரும் உள்ளனர்.
கருப்பாக உள்ளவர்கள் சிவப்பாக உள்ளவர்களை விட எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. இதை குறையாக நினைத்து , போலி அடையாளம் மூலம் மற்றவரை கவர நினைக்கும் ஒரு இளைஞனைப் பற்றியக் கதை தான் ‘ஜிகினா’ .
‘ஜிகினா’ திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமியின் நிறுவனம் மோளம் வெளி இட இருப்பதே எனக்கு மிகப் பெருமை. அதற்காக லிங்குசாமி சாருக்கும், போஸ் சாருக்கும் நன்றிகள் பல. என்னுடையக் கதா பாத்திரத்தை இயக்குனர் ரவி நந்தா பெரியசாமி மிக அருமையாக வடிவமைத்து உள்ளார். படம் பார்த்த பின்னர், அரங்கில் இருந்து வெளி வரும் ரசிகர்கள் இடையே என்னுடைய கதாப்பாத்திரம் பெரிய அளவுக்கு பேசப்படும் என்பதில் எனக்கு தீவிர நம்பிக்கை உண்டு.
வளர்ந்து வரும் என்னைப் போன்ற நடிகர்களுக்கு கிடைக்கும் இத்தகையக் கதா பாத்திரம் மிக பெரிய வரமாகும். நமது வாழ்வில் இன்றி அமையாத அங்கமாகி விட்ட பேஸ்புக் தான் ,’ஜிகினா’ வின் முக்கிய கதா பாத்திரம். ‘ஜிகினா’ இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான படமாக இருக்கும் என்பதிலும் , இதுவே வர்த்தக ரீதியாக இந்தப் படம் பெரும் வெற்றிப் பெற உதவும் என்பதில் சந்தேகமே இல்லை ‘ என்று பளீரிடும் தன்னம்பிக்கையோடுக் கூறினார் விஜய் வசந்த்.