தான் வெற்றி பெற்ற அமேதி தொகுதிக்கு விசிட் அடித்திருக்கும் ராகுல் காந்தி அங்கே கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்தித்துப் பேசினார். அப்போது இவ்வாறு அவர் பி.ஜே.பி அரசைத் தாக்கிப் பேசினார்.
புரே லாடி கிராமத்தில் பேசியபோது அவர் “நரேந்திர மோடி அரசு முதலாளிகளுக்குச் சாதகமாக மட்டுமே இருக்கிறது. இந்த அரசு விவசாயிகளிடமிருந்து நில அபகரிப்புச் சட்டம் மூலம் நிலத்தைப் பிடுங்கி எடுக்க நினைத்தது. அதை காங்கிரஸ் தான் தடுத்தது” என்றார்.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாததால் சரியான சீர்திருத்தங்களைச் செய்ய முடியவில்லை என்று ராகுல் குறைப்ட்டுக் கொண்டார். ஏற்கனவே பி.ஜே.பியினர் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள 44 தொகுதிகளுக்கும் சென்று காங்கிரஸ் கட்சியின் பெயரை டேமேஜ் செய்ய முடிவெடுத்திருந்ததைக் காலி செய்யவே ராகுல் காந்தியின் இந்தப் பயணம் அமைந்திருக்கிறது என்கிறார்கள்.
எல்லாம் சரிதான். இதே காங்கிரஸ் தான் மன்மோகன் சிங் அரசின் மூலம் நில அபகரிப்புச் சட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்தது என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா ? அப்போது இதே பி.ஜே.பி அரசு பயங்கரமாக இதை எதிர்தததும் ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு ? எல்லாம் ஒரு டிராமாதான் போல.