விழுப்புரம் சங்கராபுர வட்டத்தில் இருக்கும் சேசசமுத்திரம் என்கிற அகரம் கிராமத்தில் ரோட்டுக்கு இந்தப்பக்கம் பி.சிக்களும் அந்தப்பக்கம் தலித்துக்களும் “அமைதி’யாக வாழ்ந்து வந்தனர்.

தலித்துகள் தாங்கள் மட்டும் கும்பிடும் சாமிக்காக தாம் உருவாக்கிய தேரை ஊரில் ஓட்டுவதற்கு கடந்த 4 வருடங்களாக போராடி வருகிறார்கள். அப்பகுதியில் இருக்கும் முற்போக்கு இயக்கத் தோழர்களும், தலித் இயக்க-கட்சித் தோழர்களும் போராடி வந்திருக்கிறார்கள்.

தலித்துகள் சார்பில் கலெக்டர் உட்பட பெரிய அதிகாரிகளிடம் 16ம் தேதி ஊரில் அமைதியாக தேரோட்டுவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. அதற்கு காவல்துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. யாரோ மூடநம்பிக்கையை மேலும் கிளறி ‘தேர் ஒரு 50 மீட்டர் தூரம் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் இருக்கும் பகுதிக்குள் வந்து திரும்பும் என்றும், அது வந்து திரும்பும் பகுதி அந்த சாமிக்கு கட்டுப்பட்டது என்று அர்த்தம்’ என்றும் கிளறிவிட்டுவிட்டனர். உடனே பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த சிலர் இது நடக்கக்கூடாது எனவே தேரை எரித்துவிடலாம் என்று முடிவு செய்திருக்கின்றனர்.

ஆகஸ்டு 15ம் தேதி சுமார் 7.15 மணியளவில் தேர் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் கூரை வீட்டிற்கு ஆதிக்க சாதி வெறியர்கள் தீ வைத்து நாசம் செய்தனர் அதோடு மட்டுமின்றி பெட்ரோல் குண்டும் வீசினர் அப்போது ‘ஏம்பா வேண்டாம்ப்பா’ என்கிற ரீதியில் பிற்படுத்த ஜாதி ஆட்களை நட்பாகத் தடுக்கச் சென்ற காவல்துறையினரையும் அடிபட்டனர். அதில் ஏழு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். 3 காவல்துறை அதிகாரிகளுக்கு மண்டை உடைந்தது. பெட்ரோல் குண்டு வீசியதால் 3 தலீத்துகளின் வீடுகள் தீக்கிரையாகின, தேர் மீதும் பெட்ரோல் குண்டு வீசி சேதம் செய்யப்பட்டது.

வலிமையான பின்னனி இல்லாமல் இது போன்ற தாக்குதலை செய்யும் மனநிலை சாதி வெறியாளர்களுக்கு உருவாக முடியாது. இந்தச் பிறப்பட்ட சாதி வெறியாளர்களிடத்தில் அரசும் மென்மையான போக்கையே கடைபிடிக்கிறது. இதுவரையில் தலித்துக்களின் மேல் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் எவற்றிற்கும் தகுந்த தண்டனைகளை அரசால் வழங்கப்பட்டதேயில்லை. அரசுக்கு தெரியாமல் இந்த வன்முறையும் நிகழ வாய்ப்பில்லையில்லை என்கிறார்கள் தலித் மக்கள்.

40 பேர் காயமடைந்திருக்கிறார்கள். 15 தலித்துகளின் வீடுகள் எரிக்கப்பட்டிருக்கினறன. இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக பெட்ரோல் குண்டு தாக்குதல்கள் நிகழ்ந்திருக்கிறது. பெருமளவில் கற்களை கொண்டும் தாக்கி இருக்கின்றனர். இரு தரப்பிற்கும் இடையே அமைதிக் குழு ஏற்படுத்தி காவல்துறையினர் பேசிய பொழுது தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையை மறுத்து சென்ற சாதிவெறியினர் மீது தக்க நடவெடிக்கைகளை எடுத்திருந்தால் வன்முறை தடுக்கப்பட்டிருக்கலாம்.

இந்தப் பகுதி அமைச்சராக உள்ள அதிமுக எம்.எல்.ஏ. மோகன் அவர்களுடைய பகுதி. கிராமப்புற தொழில் மற்றும் சிறு தொழில்களுக்கான அமைச்சராக இவர் தற்போது இருக்கிறார். இதுவரை இவர் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கவரவில்லை.

Related Images: