‘விண்டோஸ் 10 ஓ.எஸ்.’ வந்தாலும் வந்தது. அதன் பின்னால் மைக்ரோசாப்டின் கிடுக்கிப்பிடித்தனமும், எதேச்சதிகாரத்தனமும் சேர்ந்து வெளிவரத்துவங்கியுள்ளன. சென்ற வாரம் விண்டோஸ் அப்டேட் செய்வதற்கு வாடிக்கையாளரின் இன்டர்நெட் பேண்ட்விட்த் ஐ மைக்ரோசாப்ட் உபயோகப்படுத்தப்போகிறது என்கிற தகவல் வெளியானது.
இப்போது விண்டோஸ் 10 இயங்குதளம் விண்டோஸ் அப்டேட்டை கட்டாயமாக்கப் போவதாக தகவல் வந்துள்ளது. முந்தைய இயங்குதளங்களான விண்டோஸ் 7, 8 போன்றவற்றில் விண்டோஸ் அப்டேட் செய்வது வாடிக்கையாளரின் விருப்பமாக இருந்தது. வாடிக்கையாளர் விரும்பாவிடில் விண்டோஸ் அப்டேட்டை நிறுத்திவிட செட்டிங்குகள் கொடுக்கப்பட்டிருந்தன. விண்டோஸ் 10 ல் அவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்டர்நெட்டில் இணைக்கப்பட்டவுடன் விண்டோஸ் அப்டேட் வேலை செய்து அப்டேட்டுகளை பதிவிறக்கம் செய்து அப்படியே நிறுவிவிடும். மைக்ரோசாப்ட் தனது வாடிக்கையாளர் சேவை ஒப்பந்தத்தை (EULA – End User License Agreement) மாற்றியமைத்திருக்கிறது. அதன்படி விண்டோஸ் அப்டேட் தானாகவே செய்யப்படும். வாடிக்கையாளரின் விருப்பம் பற்றி மைக்ரோசாப்ட் கவலைகொள்ளப்போவதில்லை.
இது இப்படியென்றால் இன்னொரு குண்டும் இருக்கிறது. அது விண்டோஸ் 10 ல் அங்கீகாரம் பெறாத, போலி லைசன்சுகள் உள்ள, பைரட் சாப்ட்வேர்கள், பைரேட் கேம்கள், போலி ஹார்டுவேர்கள் ஏதாவது இருந்தால் அவற்றை விண்டோஸ் 10 தளம் தானாகவே நீக்கிவிடவும் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளரின் சுதந்திரத்தினுள் அத்து மீறுவதாகும் என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். வாடிக்கையாளரின் கணிணிக்குள் எட்டிப் பார்த்து சாப்ட்வேர்களை கண்காணிக்கும் வேலையை மைக்ரோசாப்ட் நிறுவனம் எடுத்திருப்பது துரதிர்ஷடமானதாகும். சாப்ட்வேர்களை எப்படி போலியானது என்று மைக்ரோசாப்ட் முடிவு செய்யும் என்பதும் தெளிவாக கூறப்படவில்லை. அதே போல போலியான ஹார்டுவேர் என்று எவற்றைக் குறிப்பிடுகிறது என்பதும் தெரியவில்லை. எக்ஸ் பாக்ஸ் எனப்படும் மைக்ரோசாப்ட் கேமுக்கு குறைந்த விலையிலான ஒரு பைரேட்டட் லோக்கல் ஹார்டுவேர் கிடைக்கிறது. அதை குறிவைத்து தான் மைக்ரோசாப்ட் இப்படிச் சொல்கிறதா என்பது தெரியவில்லை.
ஆகவே கணணி வல்லுனர்களே நம் சுதந்திரத்தினுள் எட்டிப் பார்க்கும் இந்த விண்டோஸ் 10 ஐ போட வேண்டுமா என்பதை கொஞ்சம் வெயிட் பண்ணி முடிவு செய்யுங்கள்.