அழகிரியின் நெருங்கிய நண்பரான பொட்டுசுரேஷ் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி மதுரையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தேடப்பட்டு வந்தவர் திமுக பிரமுகர் அட்டாக் பாண்டி. காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வந்த அட்டாக் பாண்டியின் நெருங்கிய பிரமுகரின் செல்லுக்கு புதிய நம்பரிலிருந்து ஒரு கால் வந்துள்ளது. அது மும்பையிலிருந்து அட்டாக் பாண்டி பேசியது என்பதை அறிந்து அட்டாக் பாண்டியை நேற்று மும்பையில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து மதுரை கொண்டு வந்தனர்.
தலைமறைவாகும் முன்பு அட்டாக் பாண்டி அழகிரியிடமிருந்து ஸ்டாலின் பக்கம் வந்து சேரந்திருந்தார். ஸ்டாலினை சந்தித்து அவருடைய ஆசிர்வாதமும் பெற்றிருக்கிறார். அட்டாக் பாண்டியிடம் இது சம்பந்தமாக வாக்குமூலம் வாங்கி பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் ஸ்டாலின் பெயரை போலீஸ் உள்ளே இழுக்கும் என்கிறார்கள்.
‘நமக்கு நாமே திட்டம்’ எனும் பெயரில் மு.க.ஸ்டாலின், 25 ஆம் தேதி மதுரை நகரை சுற்றி வந்து மக்களை சந்த்திக்க இருக்கிறார். பொட்டு சுரேஸ் கொல்லப்பட்ட ஜனவரி 31ம் தேதிக்கு மறுதினம் அட்டாக் பாண்டியின் ஆதரவாளர்களான கீரைத்துறையைச் சேர்ந்த சபா என்ற சபாரத்தினம், சந்தானம், ராஜா என்ற ஆசா முருகன், லிங்கம், சேகர், செந்தில், கார்த்திக் ஆகிய 7 பேர் நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்கள் அளித்த வாக்குமூலம் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ளது. இவற்றை வைத்து அட்டாக் பாண்டியும், அட்டாக் பாண்டியின் வாக்குமூலத்தை வைத்து ஸ்டாலினும் பொட்டு சுரேஷ் வழக்கில் உள்ளே சம்பந்தப்படுத்தப்படக் கூடும்.