ஜைனர்களின் உண்ணாநோன்பு திருவிழா செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 19 வரை நடைபெற உள்ளது. இதையொட்டி மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் இறைச்சி விற்பனைக்கு 3 நாட்கள் முதல் 8 நாட்கள் வரை தடை விதித்துள்ளன. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தற்போது இந்தத் தடை லிஸ்டில் ஹரியானாவும் புதிதாய் சேர்ந்திருக்கிறது.
மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு கடந்த மார்ச் மாதம் அம்மாநில அரசு தடை விதித்தது. இதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டமும் நடத்தினர். இது பா.ஜ.க. அரசின் “சைவ பயங்கரவாதம்” எனவும் விமர்சிக்கப்பட்டது.பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களைப் போல ஜைனர்கள் திருவிழாவை காரணம் காட்டி ஹரியானா அரசும் இறைச்சி விற்பனைக்கு 8 நாட்களுக்கு தடை விதித்துள்ளது.
நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் பழைய இந்து மன்னர் டோக்ராவின் சட்டங்களிலொன்றைத் தேடி எடுத்து அம்மாநிலத்தில் மாட்டிறைச்சியைத் தடை செய்தது அமமாநில உயர்நீதிமன்றம்.
இவ்வாறு மக்கள் என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக் கூடாது என்று பா.ஜ.க அரசுகள் மக்களுக்கு ஆணையிட ஆரம்பித்துள்ளனர். நல்ல ஆரம்பம். நாடு இந்தப் போக்கில் போனால் எவ்வளவு விளங்கும் என்பது அந்த மகாவீரருக்கே வெளிச்சம்.