தன் சம்பந்தப்பட்ட பட புரமோஷன்களுக்கே வராத, சகலரையும் கலாய்த்தே கல்லா கட்டிக்கொண்டிருக்கும் காமெடி நடிகர் மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நிரந்தர அறை புக் பண்ணி ‘டெண்ட்’ அடித்திருக்கிறாராம். அவருக்கு அங்கே கம்பெனி கொடுப்பவர் சங்கீதக்குரலுக்கு சொந்தக்காரரான முருகனின் அண்ணன்.
இவிங்க அந்தமாதிரி ஆளுங்களா என்று அவசரப்படாதீர்கள். காமெடி கடைசி இருபடங்களில் ஜோடியாக நடித்தாரே ஒரு அரபிக்குதிரை அவருடன்தான் இருவரும் ’டிஸ்கசன்’ நடத்துகிறார்களாம்.
தனது படங்கள் தவிர்த்து மற்ற படங்களில் அந்த நடிகை கமிட் ஆவதற்கு 144 விதித்துள்ள காமெடி, `உன்ன விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்ல.காலகாலத்துக்கும் உன்ன என் கஸ்டடியில வச்சுக்காப்பாத்துறேன்` என்று சத்தியமும் செய்திருக்கிறாம்.
ஸோ ஷூட்டிங்கே போகாமல் டிஸ்கசன் மட்டுமே கலந்துகொண்டு சம்பாதிக்கிறார் அந்த நடிகை.