எங்கே ? மதுரைப் பக்கமா? இது நடந்தது என்று கேட்டால், இங்கே இல்லை இங்கிலாந்தில் இது நடந்திருக்கிறது
லண்டனில் ஹெலன் டேல் என்பவரின் 15வயது மகள் ஹாரியட் டேல் அங்கு டிரந்தம் உயர்நிலை பள்ளியில் படித்து வருகிறார். ஒருநாள் மாணவி டேல் பள்ளிக்குப் பாவாடை அணிந்து வந்திருந்தார். அவர் அணிந்து வந்திருந்த ஆடை ஆண் ஆசிரியர்களின் மனதை பாதிப்பதாக கூறி நிர்வாகத்தினர் அவரை பள்ளியை விட்டு வீட்டுக்கு அனுப்பினார்கள்.
பின்னர் ஒருநாள் அந்த மாணவி இறுக்கமான பேண்ட் அணிந்து வந்திருந்தார். இதுவும் ஆண் ஆசிரியர்களை பாதிப்பதாக கூறி அவரை பள்ளிக்கு வர தடை விதித்தனர். அதன் பிறகு இந்த மாணவி வேறு ஆடை அணிந்து பள்ளிக்கு வந்தார்.
முதல் நாளன்று பள்ளிகூட்டத்தில் வந்து கலந்து கொள்ள முடியவில்லையே என மிகவும் பாதிப்பு அடைந்தேன்.நான் எனக்கு சவுகரியமான வகையில் ஆடைகளை அணிகிறேன் அது ஆசிரியர்களுக்கு சவுகரியமாக் இல்லை. இதுபற்றி மாணவியின் தாயார் ஹெலன் டேல் கூறும்போது, ’பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடுகள் மாணவர்களின் உரிமைகளை பாதிப்பதாக இருக்கிறது’ என்று கூறினார்.
லண்டனிலும் இப்போது உடையின் எல்லைகளை வரையறுக்க ஆரம்பித்திருப்பது புதிய விஷயம் தான். கட்டுப்பெட்டியாக இருக்கவேண்டாம், அதற்காக கட்டுப்பாடே இல்லாமலிருப்பதும் சரியல்ல தான். கடந்த மேமாதத்திலும் இதுபோன்ற உடைக்கட்டுப்பாடு விதித்ததற்காக மாணவிகள் பள்ளியொன்றில் போராட்டம் நடத்தினர்.