பொதுவாக பிரபலங்கள் அரசுக்கு எதிரான கருத்துக்களை துணிச்சலாக சொல்வதில்லை. அதிலும் நடிகைகள் பற்றி கேட்கவே வேண்டும். பெரும்பாலான நடிகைகளுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. ஆனால் எல்லா நடிகைகளும் அப்படியில்லை. வித்யா பாலன் போன்ற நடிகைகள் அவ்வபோது அரசை விமர்சிப்பதுண்டு. அப்படித்தான் டாப்ஸியும் தற்போது அரசை நக்கலடித்திருக்கிறார்.
நிர்பயா வழக்கு உட்பட சில சமூக பிரச்சனைகளில் துணிந்து தனது கருத்தை பதிவு செய்து வந்த டாப்ஸி இப்போது பி.ஜே.பி அரசாங்கம் எடுத்திருக்கும் சிக்கன், மட்டன் விவகாரத்தையும் கடுமையாக சாடியிருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கன், மட்டன் விற்பனைக்கு அரசு சமீபத்தில் தடை விதித்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிற நிலையில் அரசின் இந்த முடிவை பல பல கட்சிகளும் எதிர்த்து வருகின்றன.
இந்த நிலையில் அரசின் இந்த நடவடிக்கையை சாடியிருக்கும் டாப்ஸி, சிக்கன், மட்டன் இரண்டையும் அசைவ உணவுகள் என்றால் மீன் என்ன சைவ உணவா? என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.
அதோடு ஒருவேளை அரசு விற்பனை செய்கிற மீன்கள் எல்லாமே ‘சைவ மீன்கள்’ போல என்றும் நக்கலடித்திருக்கிறார்.