ஏதோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் வெளியிடுவதற்கு பில்டப் கொடுப்பது போல டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பான வாட்ஸ் அப்பை ஞாயிறன்று வெளியிட இருப்பதாக ‘தலைமறைவாக (!) உள்ள’யுவராஜ் முதல்நாளே அறிவித்துவிட்டார்.
அதன்படி ‘தியாகி’யுவராஜ் (தலித் மாணவன் கோகுல்ராஜ்-ஐ படுகொலை செய்த கொலையாளி) வாட்ஸ் அப் புகழ் (?!) ஞாயிறன்றும் 50 நிமிடம் ஓடக் கூடியவாட்ஸ் அப் ஒன்றை வெளியிட்டு, “சாதனை” (ஸ்காட்லாந்து போலீசுக்கு சவால்விடும், தமிழக போலீசுக்கு) சவால்விட்டுள்ளார்.
இதில் கொடுமை என்னவென்றால், டிஎஸ்பி விஷ்ணுபிரியா மறைவுக்காக குடம் குடமாக “கண்ணீர்” விட்டுள்ளார்.
அதாவது விஷ்ணுப்பிரியா மரணத்திற்கு இவர் காரணம் இல்லை; போலீசுதான் காரணம் என்பதற்கு “விலாவாரியாக” விளக்கமளித்துள்ளார்.டிஎஸ்பி விஷ்ணுபிரியாவுடன் முன்பு நடத்திய தொலைபேசி உரையாடலை நரித்தனமாக பயன்படுத்தி, தன்னை ஒரு தியாகி போல் உருவகம் செய்துள்ளார்.
இவரின் பேச்சு, ஆதார உரையாடலில் இருந்தே, இவரும் விஷ்ணுப்பிரியா மரணத்திற்கு காரணம் என்பதை லாவகமாக மறைத்துள்ளார். காவல்துறைக்கு (சிபிசிஐடிக்கு) குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க, சிலரது பெயரை குறிப்பிட்டு, அவர்கள்மீது, “விஷ்ணுபிரியாவை இவர்கள்தான் கொன்றார்கள்” என்று வழக்கைப் பதிவு செய்ய “உத்தரவு” இட்டுள்ளார்…!
இது ஒன்றே போதும் “அம்மா”வின் ஆட்சியை அதன் லட்சணத்தை, சட்டம் -ஒழுங்கு சந்தி சிரிப்பதை காண்பதற்கு.இந்த லட்சணத்தில் இன்னும் ஒருவாரம் கெடு வேறு விதித்துள்ளார். ஆனால் உறுதியாக தெரிகிறது இவரது ஜாதிவெறிக்கு தூபம் போடுவதற்கு காவல்துறையில் சில கறுப்பாடுகள் இருக்கிறதென்பது…!
– தாரைபிதா (முகநூல் பதிவிலிருந்து)