`கமலுக்கு கதையை அவுட்லைனாக சொல்லிவிட்டேன். அதில் உதட்டோடு உதடு கவ்வும் 5 லிப்லாக் காட்சிகள் உள்ளன. அதை கமல் மிகவும் ரசித்தார். மற்றவைகளை பின்னர் சொல்கிறேன்` என்று ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த இயக்குநர் ஒருவரை இன்று கமல் நேரில் வரவழைத்து `விருந்து` கொடுத்தார்.
இதன்பின்னர் வெளியே வந்த இயக்குநர் `நான் கமலை சும்மா மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன். அவருக்கு கதையெல்லாம் சொல்லவில்லை. அவரை வைத்து நான் படம் இயக்குவதாக வந்த செய்திகளுக்கு கமலின் காலில் விழுந்து மன்னிப்புக்கோருகிறேன்` என்று கதறி அழுகிறார்.
இயக்குநரின் பெயர் ஆதிக் ரவிச்சந்திரன். அவர் இயக்கிய காவியம், படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷாலேயே பிட்டுப்படம் என்று அழைக்கப்பட்ட `திரிஷா இல்லைனா நயன்தாரா`.
கமல் இல்லத்தில் என்ன நடந்திருக்கும் என்பது உங்கள் கற்பனைக்கு. பரபரப்பா ஏதாவது சொல்லவேண்டுமென்று கப்சா விடுவார்கள் தான். அதுக்காக இப்படியா?