டில்லி ஆம்ஆத்மி அரசில் உணவுத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் ஆஷிம்கான் . இவர் உணவுத்துறையில் சிலருக்கு கான்டராக்ட்களில் சிலருடன் பேரம் பேசியதாக புகார் எழுந்தது . இதனையடுத்து இந்த தகவல் வெளியே பரவும் முன்னதாக தாமே முன்வந்து அமைச்சரை நீக்குவதாக பத்திரிகையாளரை கூட்டி அறிவித்தார்
இது குறித்து பேட்டியளித்த கேஜ்ரிவால் “அமைச்சர் ஆசிம்கான் மீது ஒரு ஊழல் புகார் வந்துள்ளது இது தொடர்பாக எனக்கு ஆடியோ ஆதாரமும் கிடைத்தது . இதனையடுத்து இவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கிட முடிவு செய்துள்ளேன் .இவர் மீது சிபிஐ விசாரணை நடத்தவும் நாங்கள் பரிந்துரை செய்யவுள்ளோம் . ஆம் ஆத்மி அரசு, ஊழலுக்கு எதிரானது என்பது ஆசிம் அகமது கான் நீக்கத்தின் மூலம் புலப்படுத்தியுள்ளோம். எனது மகனாக இருந்தாலும் கூட ஊழல் புகார் வந்தால் நான் நடவடிக்கை தயங்க மாட்டேன் , தப்பிக்க முடியாது . ஊழலை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் . அதேபோல் ஊழல்குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மகாராஷ்டிரா முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோரை மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும் .” இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார் .
உண்மையோ, பொய்யோ அமைச்சர் மீது நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு எழுந்ததுமே அவரை நீக்கியதுதான் கேஜ்ரிவாலின் அரசியல் நேர்மையை வெளிப்படுத்துகிறது. மோடி மாதிரியோ, ஜெயலலிதா, கருணாநிதி மாதிரியோ கோர்ட்டில் தான் கேஸ் உள்ளது. இன்னும் நிரூபிக்கலை என்று சால்ஜாப்புகள் சொல்லவில்லை அவர். அத்தோடு மட்டுமின்றி அந்த அமைச்சர் மீதான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் நேர்மையானவர் என்றாலும் அது வெளிவரும் வாய்ப்பையும் வழங்குகிறார் கேஜ்ரிவால்.
ஊழலே இல்லை என்று முழங்கும் மோடி வசுந்தரா ராஜே, ஷிவ்ராஜ் சிங் ஆகியோரை இதே மாதிரி பதவி நீக்கி விடுவாரா என்ன ? குற்றம் குற்றமே என்று தில்லாக நடவடிக்கை எடுக்கும் கேஜ்ரிவால் ஒரு சிறந்த அரசியல் தலைவர் தான். சந்தேகமில்லை.