அமெரிக்கா, இலங்கை, இந்தியா, சீனா எல்லோரும் சேர்ந்து 20099ல் கொல்லப்பட்ட 2 லட்சம் தமிழர்களை அப்படியே மூடி மறைத்து தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்று மறைத்தன. ஆனாலும் உண்மைகளும், ஆதாரங்களும் வெளியே வரவே வேறு வழியின்றி போர்க்குற்றம் நடைபெற்றது என்று ஐ.நா அறிக்கை வெளியிட்டது.
இறுதிகட்டப் போரில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. மேலும் இலங்கை அரசு மீது போர்க்குற்றம், மனித உரிமை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் வைத்தது. ஆனால் சிங்கள மீன் தப்புவதற்காக வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய உள்நாட்டு விசாரணை என்றது ஐ.நா. வெளிநாட்டு நீதிபதிகள் எல்லாம் இலங்கைக்கு சித்தப்பா பெரியப்பா மக்களான சீனா, இந்தோனேசியா, க்யூபா போன்ற பங்காளிகளை அனுப்பலாம் என்பது தான் அவர்களின் ஐடியா.
ஐ.நாவின் இந்த சும்மாக்காச்சுக்கும் தீர்மானம் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் 2 நாட்கள் விவாதம் நடைபெற்றது. இதில், கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு அரசு அனுமதிக்குமோ என்று எதிர்க்கட்சிகள் கவலைப்பட்டார்கள்.
வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா இதுகுறித்து பேசும்போது, “ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் சமீபத்திய தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது போல, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பாக உள்நாட்டு அமைப்புகளே, இங்குள்ள நடைமுறைப்படி விசாரிக்கும். வெளிநாட்டு நீதிகள் அடங்கி கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு அனுமதிக்க மாட்டோம். போர் குற்றம் குறித்து விசாரணைக்கும் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.
இதெல்லாம் சீரியஸ் இல்லீங்க. சும்மான்னாச்சுக்கும் தான். உடனே ஒத்துக்கிட்டா எப்படி ? சும்மா கொஞ்ச நாள் பில்டப் குடுத்துட்டு அப்புறம் ஒத்துக்குவாங்க. பாருங்களேன். ஏன்னா வெளிநாட்லருந்து வரப்போற நீதிபதிகளும் அவங்க ஆளுதானே.