மும்பை சண்முகானந்த அரங்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த புகழ்பெற்ற பாடகர் குலாம் அலியின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குலாம் அலி, இதற்கு முன் பலமுறை மும்பையில் இசை நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார். நாடுகள் சண்டை போடும் அரசியலைப் புறக்கணித்து பலமுறை நல்லிணக்க உணர்வோடு இங்கு வந்து பாடியிருக்கிறார் குலாம் அலி.
இம்முறை பி.ஜே.பி அரசு இருப்பதால் துளிர்த்துப் போன சிவசேனா கட்சி சார்பில் இவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிவசேனா கட்சி சார்பில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தில், “குலாம் அலியின் நிகழ்ச்சியை உடனடியாக ரத்து செய்க. ஏனெனில் அவர் நம் நாட்டின் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். எக்காரணமும் இல்லாமல் நம் படை வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழக்கின்றனர். (படை வீரர்கள் இறப்பதற்கு பாடகர் என்ன செய்வார்?)

இந்நிலையில், தேசபக்தி மிகுந்த ஓர் அமைப்பாக சிவசேனா பாகிஸ்தான் பாடகரின் நிகழ்ச்சியை மும்பையில் நடத்த கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. எனவே, இந்திய குடிமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த நிகழ்ச்சியை ரத்து செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தது. (குலாம் அலியைப் இந்தியா போகவேண்டாம் என்று எந்த பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பும் மிரட்டவில்லை).” இவ்வாறு அந்தக் கடிதத்தில் நாட்டுப்பற்றின் பேரில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

நேற்று மாலை (புதன்கிழமை) நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர்கள் ரத்து செய்தனர்.

Related Images: