இவ்வளவு வருடங்களும் போர்க்குற்றமா ? அப்படி ஏதும் நடக்கவேயில்லையே.. நாங்கள் எல்லாம் வீராவேசமா விடுதலைப்புலிகளை வீழ்த்துனோமே என்று டயலாக் அடித்த இலங்கை அரசு இன்று திடீரென்று பல்டியடித்துள்ளது.
ஐ.நாவில் அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாக போட்ட தீர்மானத்தை உலகம் முழுதும் மனிதநேய ஆர்வலர்கள் காறித் துப்பியதும், ‘ஓ.கே. சுத்தமாக பூசணிக்காயை மறைக்கமுடியாது போலிருக்கு’ என்று இப்போது ராஜபக்சே காலத்தில் அமைக்கப்பட்ட இந்த உள்நாட்டு விசாரணைக்குழு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரனகாமா தான் இதுக்குத் தலைவர். தமிழர்களைக் கொன்னதை விசாரிக்கும் குழுவுக்கு இந்தச் சிங்களர் தலைவர்.
இந்தக் குழுவானது இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. 178 பக்கங்களைக் கொண்டதாக இந்த அறிக்கை அமைந்துள்ளது.
ஆகஸ்ட் 2015 என தேதியிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
- இறுதிகட்டப் போரின்போது இலங்கைப்படைகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது உண்மையே.
- ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் பரிந்துரைக்கேற்ப போர்க்குற்றம் தொடர்பான உள்நாட்டு விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை ஈடுபடுத்த வேண்டும்.
- இலங்கை நீதித்துறையில் போர்க்குற்றம் தொடர்பான வழக்குகளை கையாள சிறப்புப் பிரிவு ஏற்படுத்த வேண்டும்.
- சேனல் 4 தொலைக்காட்சியில் தமிழர்கள் கொல்லப்படுவதுபோல் வெளியான காட்சிகள் அத்தனையும் உண்மையே.
- இறுதிகட்ட போரின்போது சரணடைந்த விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். இது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
- உண்மை கண்டறியும் மற்றும் நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கான குழு அமைத்து போர்க்குற்றம் செய்தவர்களை உள்நாட்டுச் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு தண்டிக்க வழிவகை செய்ய வேண்டும்.
- இறுதிப் போரின் போது கடைசி 12 மணிநேரத்தில் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் உயிரிழந்ததற்கு விடுதலைப் புலிகள்தான் காரணம்.
- ஐ.நா. அறிக்கை கூறுவதைப் போல 40,000 தமிழர்கள் கொல்லப்படவில்லை. இனப்படுகொலை செய்யும் நோக்கத்தில் இலங்கை ராணுவம் திட்டமிட்டு தாக்குதல் நடத்தவில்லை.
இவ்வாறு அந்தக் குழு தனது பரிந்துரைகளை அளித்துள்ளது.
சரிதான்பா. நடத்துங்க. நடத்துங்க.