சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவருடைய அடுத்த படமான ‘எந்திரன் 2’ படத்தின் ஆரம்பகட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் ரஜினி, அர்னால்ட், எமிஜாக்சன் உள்பட பலர் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் ‘ஐ’ படத்தில் விக்ரமுக்கு மேக்கப் போட்ட வேட்டா நிறுவனத்தின் ஷான் ஃபூட், ‘எந்திரன் 2’ படத்தில் ரஜினிக்கு மேக்கப்மேனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரஜினிக்கு மேக்கப் டெஸ்ட் வரும் டிசம்பர் மாதம் சென்னையில் நடக்கவுள்ளதாகவும், அதே நேரத்தில் ரஜினிக்கு டூப் ஆக நடிப்பவர்களுக்கும் மேக்கப் டெஸ்ட் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

டிசம்பர் இறுதியில் சென்னையில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் ‘கபாலி’ படப்பிடிப்பு முடிந்தவுடன் ரஜினி இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

Related Images: