அடுத்தடுத்து சினிமாவுல வேகமா ஏறி வந்தேன். விவேக் நடிச்சிட்டு இருந்தது இங்கிலீஸ் காமெடிணே. அது நமக்கு வரல. அவரை விட்டுடலாம். அப்போ எனக்கு போட்டி வடிவேலு தான். 40, 50 படங்கள்ல வடிவேலு கடுமையான போட்டி கொடுத்து வந்தேன். நல்லா போய்க்கிட்டு இருந்த என் சினிமா ரூட்டை கெடுத்தது என் மேனேஜர் தான்.
ஆமாண்ணே.. நான் ஏறி வந்த படியை எல்லாம் உடைச்சு விட்டவர் அவர் தான். என் தேதி இருந்தும் நான் பிஸியா இருக்கேன்னு வாய்ப்பு கொடுக்க வர்ற இயக்குநர்கள்கிட்ட சொல்றது. சம்பளத்தை அதிகமா ஏத்திட்டாருனு இல்லாத பொல்லாத கதையை கட்டி விட்டு என்னை ஏமாத்திட்டாரு. இத்தனைக்கும் காரணம் நான் அவரை முழுசா நம்பினேன். குதிரைக்கு கடிவாளம் போட்டு அவர் கைக்குள்ள வைச்சுக்கிட்டார். அவரை பத்தி பிறகு தான் தெரிய வந்தது. உஷாராயிட்டேன்.
அடுத்தவர் கோபி. வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தோட டைரக்டர். பல வருஷமா நடிச்சு குருவி சேர்க்குற மாதிரி சேர்த்து வைச்சிருந்தேன். படிக்க நினைக்குற ஏழைப்பிள்ளைங்களுக்கு பயன்படுற மாதிரி பள்ளிக்கூடம் ஆரம்பிக்கலாம். டாக்டருக்கு படிச்ச என் பொண்டாட்டிக்கு ஒரு ஆஸ்பத்திரி கட்டி கொடுக்கலாம்னு ஆசையோட இருந்தேன்.
அந்தப் பணத்தை வைச்சு படம் எடுத்து அதுல வர்ற லாபத்துல உங்க ஆசையை பெரிசா நிறைவேத்திடலாம்னு ஐடியா கொடுத்தாரு. நானும் நம்பினேன். எம்பாட்டுக்கு இருந்தவன இறக்கி விட்டுட்டாய்ங்க. பல லட்சம் நஷ்டம்ணே. இத்தனைக்கும் அடுத்தங்க்கிட்ட கடன் வாங்கித்தான் படம் தயாரிச்சேன். தயாரிப்பாளர்னு சொல்றதை விட பணம் போட்டேன். இந்த படத்தை தயாரிச்சதால பணம் போச்சு, நிம்மதி போச்சு. இனி படம் எடுக்கணும்.. நீங்க தயாரிங்கனு யாரும் வந்தா அந்த பகுதியில கூட திரும்ப மாட்டேன்.
அண்ணே ரோட்டுல நான் போன இவர் தான் கஞ்சா கருப்புனு எல்லோருக்கும் தெரியும். ஆனா, வேல்முருகன் போர்வெல்ஸ் இயக்குநர் இவர் தான்னு சொன்னா யாருக்குத் தெரியும். சினிமாவுல யாரை நம்பணும், யாரை நம்பக் கூடாதுனு இப்பக் கத்துக்கிட்டேன். இப்போ ரொம்ப கவணமா இருகேன், நானே தேதி, சம்பளம், கதை, கேரெக்டர், என்ன சீன்னு எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்.
எல்லாத்தையும் கேள்வி பட்ட அமீர் அண்ணே, சினிமாங்குறது நவரத்தினக்கல் மாதிரி. பத்திரமா பார்த்துக்கணும். கீழே போட்டு உடைஞ்சிட்டா அதை ஒட்ட வைக்க முடியாதுனு அறிவுரை சொன்னாரு. அதை முழுசா புரிஞ்சுக்கிட்டேன்’’ என்று புலம்புகிற கஞ்சாகருப்புவின் வாய்ப்பை சூரி வந்து பரித்து விட்டதாக நினைத்து அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.
இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் சசிகுமார் ஆபீஸில் ஆபீஸ் பையனாக இருந்த போது கஞ்சாகருப்புவிடம் வந்து அடிக்கடி செலவுக்கு பணம் வாங்கி விட்டு செல்வாராம். ஆனால் அவர் இயக்கிய படங்களில் கஞ்சா கருப்புவுக்கு வாய்ப்புத் தரவில்லை என்ற ஆதங்கமும் அவரிடம் இருக்கிறது.