சமந்தா நடித்த 10 எண்றதுக்குள்ள படத்தின் தெலுங்கு ஏரியா விநியோக உரிமையை சமந்தாவே வாங்கியிருந்தாராம்.
இன்வெஸ்ட்மென்ட் எவ்வளவு தெரியுமா? 20 கோடி! இவ்வளவு பெரிய தொகையை கொட்டிய அவருக்கு கிடைத்திருக்கும் ரிசல்ட்? கூட்டி கழித்து பார்த்தாலும், ஈவு கூட தேறவில்லை. இதனால் மனம் தளர்ந்த சமந்தாவுக்கு ’கவலைப்படாதே… நான் இருக்கேன் என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ். அவர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் சமந்தாவை புக் பண்ணி இந்த கடனுக்கு பிராயசித்தம் தேடுவார் போலிருக்கிறது. ஒரு கடனை அடைக்க, இன்னொரு கடன்.