அரசியலில் அதிரடியாய் சுழன்று வரும் கேப்டன் விஜயகாந்த் விருதகிரி படத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் கதாநாயகனாக களம் இறங்க தயாராகி விட்டார்.
ஒரு சாதாரண மனிதன் மாபெரும் சாம்ராஜ்யத்திற்கு அரசனாவது தான் விஜயகாந்த் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் கதை. வரலாற்றுப்படமாக உருவாகும் இதில் அவரது மகன் சண்முக பாண்டியனும் முக்கியப் பாத்திரத்தில் களம் காண்கிறார். 24 பட்ஜெட்டில் உருவாகும் இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்க உள்ளார்.
படத்திற்கு 22 ம் தேதி பூஜை. இந்தோனேஷியா, நியூசிலாந்து, லண்டன், சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். விஜயகாந்துக்கு ஜோடியாக நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
கேப்டனுடன் நடிக்க தமன்னா ஒத்துக்கொள்வாரா? இந்த அறிமுக இயக்குநரையும் கேப்டன் பாதியில் உதைத்து விரட்டுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..