‘மழையால் பாதித்த மக்களுக்கு அரசு தான் உதவிகள் செய்ய வேண்டும், நடிகர் சங்கம் எந்த நிவாரணமும் செய்ய இயலாது’என்று நடிகர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாகச் வெளியாகின. இச்செய்திக்கு நடிகர் சங்கம் மறுப்பு தெரிவித்திருந்தது. பெரும் நடிகர்கள் நாலு பேர் சேர்ந்தாலே போதும் சில கோடிகள் ரெடி செய்து மக்களுக்கு உதவிகள் வழங்கிவிட முடியும். ஆனால் பாவம் மனசுதான் அவர்களுக்கு வரவில்லை.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிதம்பரம் தாலுக்காவில் உள்ள கரிவேட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு ‘என்விரான்மன்ட் பவுன்டேஷன் ஆப் இந்தியா’ என்ற தன்னர்வ தொண்டு நிறுவனம் நிவாரண உதவிகளை செய்து வருகிறது. அடிப்படை பொருட்களான அரிசி, பருப்பு ,உப்பு,சர்க்கரை போன்ற சமையல் பொருட்களும் கரண்டி, தட்டு மற்றும் சமையல் பாத்திரங்களும் மற்றும் பாய், பெட்ஷீட் போன்றவைகளும் மாற்றுத்துணிகளுக்காக புடவை, வேட்டி மற்றும் டி.சர்ட் போன்ற பொருட்களும் அனுப்பப்பட்டு இருக்கின்றன.
இந்த அமைப்புக்கு நடிகர் சங்கத்தோடு கைகோர்த்து எஸ்.வி.சேகர், பூச்சிமுருகன், மனோபாலா மற்றும் ரோகிணி ஆகியோர் உதவியுள்ளனர். மேலும், நடிகர் அருள்நிதி 1000 பெட்சீட்கள் மக்களுக்காக வழங்கியுள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் அயுப்கான் மற்றும் ஹேமச்சந்திரன் மூலமாக உதவிகள் செய்யப்பட்டு இருக்கிறது என்றும் நடிகர் சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்கம் மட்டுமல்ல நடிகர்களும் தனித் தனியாகவே நிறைய உதவிகள் செய்ய முடியும். மக்களின் மனதில் ஸ்டார்களாக நிலைக்க வேண்டுமானால் வெறும் திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் மக்களுடன் கைகோர்க்க நடிக நடிகைகள் முன்வரவேண்டும்.