இளையராஜா இசையமைத்து வெளியாகியுள்ள ‘தாரை தப்பட்டை’ பாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். பாடல்களைப் பற்றி ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்ட சில கருத்துகளைப் பார்ப்போம்:
@govikannan:
தாரை தப்பட்டை – 80 களுக்குள் அழைத்துச் சென்ற இசைஞானிக்கு கோடி நன்றிகள்.
@kanapraba:
இசைத் தாய் இளையராஜா சுரந்த தாரை தப்பட்டை Theme ஆரம்பிக்க மயிர்கால்கள் குத்திட்டு கண்களில் நீர் இது பொய்யல்ல மெய்யே.
தாரை தப்பட்டையின் அந்த ருத்ர தாண்டவ இசை ஒன்றே போதும் இசைஞானியின் மகத்துவம் போற்ற.
என். சொக்கன்:
#தாரை தப்பட்டை Super Strong melodies, வேறென்ன எதிர்பார்க்க, நன்றி ராஜா, இன்னுமோர் ஆயிரம் கொடும்!
Vino Jasan:
நம்ம இசை! மொத்த குப்பைகளையும் அடித்துக் கொண்டு போன சென்னை பெருவெள்ளம் மாதிரி…
Saravanakarthikeyan Chinnadurai:
முதல் கேட்டலில் இரண்டு தீம் ம்யூஸிக்களும் மெத்தப் பிடித்திருக்கின்றன!
Kamal K Samy:
தெறின்னா இது தெறி!!!
Suresh Kannan:
மாணிக்க வாசகரின் திருவாசகப் பாடல்களுக்கு முன்பு இசையமைத்த திருப்தியை இன்னும் ராஜா அடையவில்லையோ என்னவோ, அது சார்ந்த ஏக்கத்தை தொடரும் வகையில் இந்த ஆல்பத்திலும் ஒரு திருவாசகப் பாடலுக்கு இசை.
பாருருவாய பிறப்பற வேண்டும் பத்திமையும் பெற வேண்டும்
சத்யபிரகாஷூம் சுர்முகியும் மிக அற்புதமாகப் பாடியிருக்கிறார்கள். பாடலின் துவக்க இசைத்துணுக்கே அத்தனை உன்னதமாக இருக்கிறது. இந்தப் பாடலை அப்படியே தூக்கி திருவாசகம் ஆல்பத்தில் சேர்த்து விடலாம் போல அத்தனை உன்னதம். இது போன்ற இசையைத் தருவதற்கு சமகால சூழலில் இந்த ஆசாமியை விட்டால் வேறு எவருமில்லை என்பதை மனச்சாட்சியோடு ஒப்புக் கொள்ள வேண்டும்.
அடுத்தது தாரை தப்பட்டை தீம். பாலா ஏற்கெனவே சும்மாவே ஆடுவார். இப்படியொரு ரணகளமான இசையை எப்படிக் காட்சிப்படுத்துவார் என்பதை கற்பனிக்கவே பயமாகவும எதிர்பார்ப்புடன் கூடிய சுவாரசியமாகவும் இருக்கிறது.
இடரினும் என்றொரு பாடலை ராஜாவே எழுதியிருக்கிறார். துவக்கச் சொற்களைக் கேடடு ‘யாராவது இது மாணிக்க வாசகர் எழுதியது’ என்றால் கண்ணை மூடிக் கொண்டு நம்பி விடலாம் போல.. அத்தனை சுத்தமான தமிழ். அற்புதமாகப் பாடிய சரத் ஓரிடத்தில் கீதம்.. என்பதை க்க்கீதம்.. என்று அழுத்தமாக உச்சரிப்பது நெருடல். இளையராஜா முன்பு இசையமைத்த, மிகவும் புகழ் பெற்ற பாடலான ‘ஜனனி. ஜனனியில்…பக்தி பீடமும் நீ என்பதை பீட்டடடமும் என பாடியதை தவறு என்று பொதுவான விமர்சனம் எழுந்தது நினைவுக்கு வருகிறது.
மற்ற பாடல்கள் எல்லாம் ராஜாவின் வழக்கமான முத்திரைகளைக் கொண்டவை. சிலது ராமராஜன் பாடல்கள் போன்றவற்றில் கேட்டிருக்கலாம். இருந்தாலும் இடையில் பிரசன்னா, மானசி பாடிய ஆட்டக்காரி மாமன் பொண்ணு .. தனியாக கவனிக்கத்தக்க வகையில் வசீகரிக்கிறது. இன்னும் சில முறை கேட்ட பிறகு விடுபட்டவற்றை எழுத முடியும்.
@arjith007:
தாரை தப்பட்டை தீம்
ஹீரோ இன்ட்ரோ தீம்
இரண்டும் மிரட்டுகிறது கேட்கும் போதே, பாலாவின் காட்சி அமைப்புகள் பலவாறாக கற்பனைகளில் விரிகிறது.
@Iam_MaheshK:
தாரை தப்பட்டை பாட்டு கேட்குறப்பவே எழுந்து ஆட தோணுது 🙂 #ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே சாங் தான் உண்மையான தர லோக்கல் சாங்..
@thanDhoniRule:
என்னடா அதிசியமா கால காத்தால சாமி பாட்டு கேக்குறே…மாலை போட போறியான்றானுங்க… அடேய் இது தாரை தப்பட்டை சாங்டா…
@karunaiimaLar:
பாட்டு கேட்குறப்பவே எழுந்து ஆட தோணுது 🙂 வெறித்தனம்.
@omprasadr:
ரகளை.. அதகளம்..கிழி.. #தாரைதப்பட்டை #ராஜாடா
Muthu Ramalingam:
இவரது அருமை உணராமல், இவர் வாழும்காலத்தில் நாமும் வாழ்கிறோமே என்கிற அற்புதம் உணராமல், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ராஜாவைக் காயப்படுத்தும் ஒரு கூட்டம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது.
இந்தப் பாடல்களைக்கேளுங்கள். நீங்களே அறியாமல் உங்கள் பாவம் கொஞ்சம் கரைய வாய்ப்பிருக்கிறது..
@prasanna_tweets:
தாரை தப்பட்டை தீம்ல நான் கடவுள் ஃபீல் இருக்குது.மத்தபடி குறை சொல்லமுடியாத ஆல்பம்.
@Santhosh_Shivan:
செத்துடலாம் இனிமே, இசை கடவுளின் தாரை தப்பட்டை பாடல்கள் கேட்டாச்சு.
#இளையராஜா sir வேற உலகத்துக்கு போக வெச்சுட்டார் 19mins☺️ on repeat mode.
@iRexArul:
மூடுபனி #இசைஞானி #இளையராஜா-வின் 100வது படம். வருடம் 1980. தாரை தப்பட்டை 1,000வது. வருடம் 2016. 4 வருடங்களில் 100. 40 வருடங்களில் 1,000.
@FandomNishvetha:
தாரை தப்பட்டை, நாதஸ்வரம் போன்ற இசைகருவிகளை மறந்த தமிழ்சினிமாவுக்கு மீண்டும் அதன் தன்மையை வெளிக்கொணர்ந்த ராஜாவுக்கு நன்றி.