இப்படிச் சொன்னது எந்த ஒரு நக்சல் போராளியும் அல்ல. நம்ம டைட்டானிக் புகழ் நடிகர் டிகேப்ரியோ தான்.
லாஸ் ஏஞ்செல்ஸில் நடந்த 73 வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகர் விருதைப் பெற்ற டிகாப்ரியோ அதனை உலகில் உள்ள அனைத்து பழங்குடி இன மக்களுக்கும் சமர்ப்பிப்பதாக தெரிவித்திருக்கிறார். டி காப்ரியோ பழங்குடி இனத்தவராக நடித்த தி ரெவனன்ட் திரைப்படம் கோல்டன் குளோப் விருதுகளுக்கான 3 பிரிவுகளில் விருதுகளை வென்று சாதனை புரிந்தது. சென்ற ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை டிகேப்ரியோ பெற்றார்.
விருதைப் பெற்றுக் கொண்ட அவர் பேசியதாவது “இந்த விருதை உலகில் உள்ள அனைத்து பழங்குடி இன மக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். இந்த விருது உலகில் உள்ள அனைத்து பழங்குடி இன மக்களுக்கும் ஒரு அடையாளமாகவும்,தளமாகவும் விளங்கும்.
இந்த பொன்னான தருணத்தில் உலகில் உள்ள அனைத்து பழங்குடி இன மக்களின் வரலாற்றை ஏற்றுக் கொள்கிறோம். அவர்களின் கலாச்சாரத்தை மதிக்கிறோம். பூர்வ குடிமக்களுக்கு எதிராக கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் நில ஆக்கிரமிப்புகளை கண்டிக்கிறோம்.
பழங்குடி மக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக நிலங்கள் வாங்கப்படுவதற்கு எதிராக நாம் அனைவரும் போராட வேண்டும். வருங்கால சந்ததிக்காக நாம் அனைவரும் இணைந்து இந்த உலகத்தைக் காப்போம். நான் வாங்கிய இந்த விருதை உலகில் ஆதரவற்றுக் கிடக்கும் அனைத்து பழங்குடி இன மக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்”.
டி கேப்ரியோவுக்கு செம தில்லுதான்.