ரஜினியின் கபாலி படத்தை இயக்கி வரும் ரஞ்சித் தனது பட அனுபவங்களை ஆங்கில ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ளார். ரஜினியை அப்படியே அவரது தற்போதைய வயதுக் கதாபாத்திரமாகவே வெள்ளை தாடி கெட்-அப்பில் படத்தில் நடிக்க வைத்துள்ளார் ரஞ்சித். அதுதான் ரஜினி இப்படத்திற்கு ஓ.கே. சொன்னதன் முக்கிய காரணமுமாம்.
ரஜினிசாரை முதலில் பார்த்தபோது எப்படி இவரை வைத்து படம் இயக்கப் போகிறோம் என்று பயந்தாராம் ரஞ்சித் . தனது வழக்கமான பாணியில் கதை நகர்த்துவதோடு ரஜினிகாந்த்துக்கு உள்ள இமேஜையும் மனதில் வைத்துதான் கபாலியை கொண்டு செல்கிறாராம்.
மெட்ராஸ் திரைப்படத்தில், ஒரு சமூக கருத்து இருந்ததை போலவே, கபாலியிலும் இருக்கும் என்கிறார் ரஞ்சித். சினிமா ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். அந்த சினிமாவை பார்த்துவிட்டு, ஜஸ்ட் லைக் தட் என மக்கள் கடக்க கூடாது. ஒரு விவாதத்தை சினிமா உருவாக்க வேண்டும் என்கிறார் ரஞ்சித். ரஜினி படத்தில் மெஸெஜ் வந்து ரொம்ப நாள் ஆச்சே.
மகேந்திரனின் பரம ரசிகரான ரஞ்சித் ரஜினி மகேந்திரனின் முள்ளும் மலரும்மில் காளி என்கிற ரவுடியாக வரும் ரஜினியை மனதில் கொண்டே கபாலி கேரக்டரை வடிவமைத்திருக்கிறாராம். அப்படத்தில் “ரெண்டு கையும், ரெண்டு காலும் இல்லாட்டிக் கூட இந்தக் காளி பொழைச்சுக்கிடுவான். கெட்ட பய சார் இந்தக் காளி’ என்று ஒரு பஞ்ச் டயலாக் பேசுவார் ரஜினி.
அதே போல தில்லான ஒரு தாதா ரவுடிதான் இந்தக் கபாலியாம். அத்தோடு ஈர மனதுள்ள தாதாவும் கூட.