அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள இந்திய மாநாட்டில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்ள இருக்கிறார்.  வாஷிங்டனில் உள்ள ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 6 மற்றும் 7 தேதிகளில் வருடாந்திர இந்தியக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது..இந்த ஆண்டு கருத்தரங்கின் தலைப்பு “மாறி வரும் இந்தியா: வாய்ப்புகளும், சவால்களும்’  என்பது.

இதில் கமலுக்கு என்ன வேலை சார் என்கிறீர்களா? கலைத்துறையில் நேரடியாக ஹாலிவுட் படங்களை காப்பியடிக்கும் லெவலுக்கு வந்தது எப்படி என்பதைப் பற்றி அவர் பேச இருக்கிறார் என்பது காது வழிச் செய்தி.

கமலுடன் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் மற்றும் திரைப்பட இயக்குநர் கரண் ஜோஹர் உள்ளிட்டோரும் இந்த மாநாட்டில் பேசவுள்ளனர்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்து புட்டு புட்டு விளக்க இருப்பவர் அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதர்.. ஸாரி..இந்திய  தூதர் நிருபமா ராவ் தலைமை தாங்குகிறாராம்.

அதில் கமல்ஹாசன் பேச்சுரிமை குறித்தும், சசி தரூர் இந்தியாவின் ஆற்றல் குறித்தும் உரையாற்றவுள்ளனர். பெண்களுக்கு அதிகாரமளித்தல் பற்றியும் அதில் பேச இருக்கிறார்கள். மாநாட்டில் கமல் ஸார் பேசி முடித்த பின் ஒரு பத்து பேருக்காவது மரை கழன்டு போவது உறுதி.

Related Images: