ப்ளசிங் என்டர்டெயினர்ஸ் தயாரிக்கும் “புத்தன் இயேசு காந்தி” திரைப்படத்தில் கிஷோர், வசுந்தரா, அசோக், மதுமிதா, கயல் வின்சென்ட் ஆகியோர் நடித்துவருகிறார்கள்.
கிஷோர் தூக்குத் தண்டனை கைதியாக நடிக்கிறார். வசுந்தராவும், அசோக்கும் பத்திரிகையாளர்களாகவருகிறார்கள். மதுமிதா சமூக அவலங்களுக்கு எதிராக போராடும் ஆக்டிவிஸ்ட் கேரக்டரில் நடிக்கிறார்.
இந்த கேரக்டருக்காக, மதுமிதா புக்கர் விருது பெற்ற அருந்ததி ராயை ரோல் மாடலாக ஏற்று அவரின் நடை, உடை பாவனைகளை உள்வாங்கி நடிக்கிறாராம். இதற்காக அருந்ததி ராய் பங்கேற்ற நிகழ்ச்சிவீடியோக்களை பார்த்து அந்தக் கேரக்டருக்குத் தன்னை தயார் படுத்தி வருவதாகக் கூறுகிறார்.
அண்மையில் தொலைக்காட்சி சேனலில் நடக்கும் விவாத நிகழ்ச்சியில் மதுமிதா மற்றும் கிஷோர் பங்கேற்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசி நடிக்கும் காட்சியில் மதுமிதா, க்ளிசரின் போடாமல் உண்மையாகவே அழுது நடித்தார்.
அவர் அழுது கொண்டே வசனம் பேசியது, அங்கிருந்த படப்பிடிப்புக்குக் குழுவினரை உருக வைத்துவிட்டது. அந்தக் காட்சி முடிந்ததும் எல்லோரும் கைதட்டி மதுமிதாவை பாராட்டினார்கள்.
அழகுகுட்டி செல்லம் படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இந்தப் படத்தின்ஒளிப்பதிவை கவனிக்கிறார். வேத்சங்கர் இசையமைக்கிறார். படத்தொகுப்பாளர் ரமேஷ் பாரதி எடிட்டிங் செய்கிறார்.
அறிமுக இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகர் இயக்குகிறார். பிரபாதீஷ் சாமுவேல், கபிலன் சிவபாதம்ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்