இசையத்தவிர வேறெதிலும் சிந்தனையைச் செலுத்தாமல் இருக்க விரும்புகிற ராஜாவை நோக்கி மீண்டும் சர்ச்சைகள். அவரை வைத்து பிப்ரவரி மாதம் விஜய் டி..வி. நடத்துவதாக இருந்த `ராஜா 1000` நிகழ்ச்சியை ரத்து செய்யவேண்டும். விஜய் டி.வியால் தமிழ்சினிமாவுக்கு எந்த நல்லதும் நடந்ததில்லை. அப்படியிருக்க ஒரு சரித்திர நிகழ்வாக திகழவேண்டிய `ராஜா1000` நிகழ்ச்சியை அவர்களுக்கு தரக்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கத்தில் தீர்மானம் இயற்றப்பட இருப்பதாக ஒரு அதிகாரபூர்வமற்ற தகவல் நடமாடி வருகிறது.
அண்மையில் கேரளமாநிலம் ராஜாவை அழைத்து இசைக்கல்லூரி கட்ட நிலம் வழங்கி வாழ்த்தியபோது கூட வாயைத் திறக்காதவர்கள், தற்போது ஒரு நிகழ்ச்சி ,அதுவும் ராஜாவைக் கவுரப்படுத்த நடக்கும் நிகழ்ச்சியைத் தடுக்க நினைப்பதும், அதற்கு கூறும் காரணமும் ஏற்புடையதாக இல்லை.
ராஜாவின் மீது அவ்வளவு அக்கறையுள்ளவர்கள் `தாரை தப்பட்டை` ராஜாவின் ஆயிரமாவது படம் என்று அறிவிக்கப்பட்ட சில தினங்களில் இதைச் செய்திருக்கவேண்டும்.