குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது அட்டகாசமான நடிப்பால் கேரள இளைஞர்களில் 72 சதவிகிதம் பேரை கொள்ளை கொண்டவர் நஸ்ரியா. இந்த சதவிகிதக் கணக்கெல்லாம் எந்த சர்வேயில எடுத்தது என்று கேள்வி கேட்காமல் தொடரவும்.
அப்படிப்பட்ட நஸ்ரியா ஃபக்த் பாசிலை திருமணம் செய்துகொண்டவுடன் சொல்லாமல் கொள்ளாமல் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டார். அவர் இனிமே சினிமாவில் நடிக்கமாட்டார் என்று வெளிப்படையாக அறிவித்தால் தன்னை ஆணாதிக்கவாதி லிஸ்டில் சேர்த்து விடுவார்கள் என்பதால் அவரது எண்ட்ரி விரைவில் இருக்கும் என்று மழுப்பலாகவே பதிலளித்து வர்கிறார் ஃபகத்.
இந்நிலையில் வீட்டிலேயே தின்று கொழுக்கும் நஸ்ரியா ஓவர் குண்டாகிவிட்டதால் இனி அவர் ஆண்டி ரோலில்தான் நடிக்க முடியும் என்று செய்தி பரவவே இணையங்களில் பலர் `நஸ்ரியாவை நடிக்க விடாமல் முடக்கிய ஃபகத்தின் படங்களை பகிஷ்கரிப்போம்` என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
கடைசியாக ஃபகத் நடித்துள்ள மகேஷிண்ட பிரதிகாரம்` என்ற படம் மிக விரைவில் ரிலீஸாக உள்ளது.