கோலாலம்பூர் விமான நிலையத்தில் தனது மேக் அப் சாதன பெட்டுக்குள் நடிகை நயன் தாரா போதைப்பொருள் வைத்திருந்ததாகவும், விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குள் வைத்து நிலைய அதிகாரிகள் அவரை விசாரித்து வருவதாகவும் இன்று அதிகாலை முதல் பரபரப்பான செய்திகள் இணையங்களில் பரவ ஆரம்பித்தன.
பின்னர் அத்தகவலில் உண்மை இல்லையென்றும், அது சாதாரண பாஸ்போர்ட் செக் அப் என்றும் `இது நம்ம ஆளு` படத்துக்கு பப்ளிசிட்டியாக இருக்கட்டுமே என்று சிம்பு, இயக்குநர் பாண்டிராஜ் வட்டாரங்கள் பரப்பி விட்டதாகவும், சென்னை திரும்பியவுடன் மேற்படி ஆசாமிகள் மீது நயன் நடிகர் சங்கத்தில் புகார் செய்யவிருப்பதாகவும் தகவல்.
பீப் அனுபவம் என்ன அது போன்ற எத்தனை அசிங்கங்கள் ஏற்பட்டாலும் அதிலிருந்து சிம்பு பாடம் கற்றுக்கொள்ளவே மாட்டார் போல.