சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் , ஆனந்தி, சரவணன், விடிவி கணேஷ், யோகிபாபு ராஜேந்திரன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’. இதை தயாரிப்பவர்கள் ராஜபக்ஷேவின் இன்னொரு பேரான லைகா நிறுவனம். காமெடி படமாக உருவாகி வரும் இப்படம் க்ளைமாக்ஸ் ஷூட்டிங்கை நெருங்கியுள்ளதாம்.
படத்தின் தலைப்பு ’பாட்ஷா’ படத்தின் ரஜினி பேசும் பன்ச் டயாலாக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் ரஜினிகாந்த் தன்னைச் சந்தித்த படக்குழுவினரை வாழ்த்தியிருக்கிறார்.
டார்லிங் படத்தில் ராஜேந்திரனின் கோஸ்ட் கோபால் வர்மா வேடம் மிகவும் வரவேற்புப் பெற்றது. அதுநாள் வரை கொடும் வில்லனாக வந்த அவர் தற்போது காமெடியனாக கலக்க ஆரம்பித்திருக்கிறார். இந்தப்படத்தில் ராஜேந்திரனின் மகா என்கிற வேடத்தை வடிவமைக்க நிறைய மெனக்கெட்டிருக்கிறார்களாம். அதில் பல ரகசியங்களும் இருக்கின்றனவாம்.
என்னமோ போங்கப்பா. தமிழ்ச் சினிமாவின் வியாபாரச் சேவை நாறுகிறது. தமிழ் மக்களைக் கொன்றழித்த ராஜபக்சேவின் பினாமி நிறுவனத்தின் கீழ் தான் இனி டி.வி. சீரியல்கள் வரை எடுப்பார்கள் போலிருக்கிறது. நல்லா இருக்குதுப்பா சினிமாத் துறையினரின் தன்மான உணர்வு !