மலேசியா விமான நிலையத்தில் வைத்து நயன்தாரா தடுப்புக் காவலில் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானதோடு விமான நிலையத்தில் நயன்தாராவுடன் மலேசிய போலீஸ் அதிகாரிகள் இருப்பது போன்ற புகைப்படமும் வெளியானதால் சமூக வலைத்தளங்களிலும், வாட்ஸ்ஆப்-பிலும் நயன்தாரா போதைப் பொருள் வைத்திருந்தார் என்கிற ரீதியில் அவல் கிண்டி, பொறியல் செய்து செய்தி பரபரப்பாகியது.

ஆனால் உண்மை இதுவென்று படக்குழுவினர் கூறுகிறார்கள்; “மலேசிய பன்னாட்டு விமான நிலையத்தின் இரண்டு முனையங்களில் பணி அனுமதி விதிமுறைகள் வேறுபட்டவை. வழக்கமாக இந்தியாவுக்கு செல்லும் பயணிகள் கே.எல்.ஏ.1 முனையத்தின் வழியே பயணிப்பர். ஆனால் புதிய விமான சேவை நிறுவனமான மலிண்டோ கே.எல்.ஏ.2 முனையத்தின் வழியே இயங்குகிறது. கே.எல்.2 என்பது குறைந்த கட்டணத்தில் இயங்கும் சாதாரண விமானங்கள் கிளம்பும் முனையம். இங்கு குடியேற்ற அதிகாரிகள் பணி அனுமதி மற்றும் அதன் விசா முத்திரைப்பதிவுக்கான சில விளக்கங்களை கேட்டனர்.

பிற்பாடு நயன்தாராவே அதிகாரிகளிடம் பேசி பிரச்சினைளுக்கு தீர்வு கண்டதோடு, மொத்தக் குழுவும் இந்தியாவுக்கு எவ்வித இடையூறுமில்லாமல் கிளம்பிவிட்டனர். நயன்தாராவின் புகைப்படங்களோடு அவரது பாஸ்போர்ட் நகலும் ஆன்லைனில் வெளியாகின. இதுபற்றி படத் தயாரிப்புக் குழு குடியேற்ற துறை மீது புகார் அளித்துள்ளனர். மலேசியா ஆன்லைன் ஊடகமே இத்தகைய தவறான செய்தி பரவ காரணம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரான்னு சொன்னா மலேசியாவும் அதிரும் என்கிற மாதிரி மலேசியாவில் அவருக்கு இவ்வளவு மவுசு இருக்கிறது என்று படக்குழுவிற்கு இந்நிகழ்வுக்குப் பிறகு தான் தெரிந்ததாம்.

Related Images: