மது சிந்தனையைக்  கொல்லும். சில  தருணங்களில் உயிரைக் கொல்லும். தங்களின் கண் முன்னே அம்மா இறப்பதை காணும் குழந்தைகளின் மன நிலையம் அவர்களின் எண்ண ஓட்டதையையும், மன உளைச்சலையும்  இக்குறும்படத்தினில் பேசு பொருளாக உருவாக்கி உள்ளோம்.

குழந்தைகள் பேசும் கண்ணாடி பிம்மங்கள். அவர்களின் சுற்றி நடக்கிற நிகழ்வுகளையே தங்களின் வாழ்க்கையாக வளர்த்து கொள்கிறார்கள். இக்குறும்படம் குழந்தைகளின் உலகத்தை உங்களின் கண் முன்னே காட்டும்.

இக்குறும்படமானது மதுரையில் நடந்த இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் தேர்ந்து எடுக்கப்பட்டது. 2015 ம் ஆண்டு சென்னையில் “This & That ” Film பெஸ்டிவலில் கலந்து கொண்டு இயக்குனர். மிஸ்கின் மற்றும் இயக்குனர். ராம் அவர்களின் பாராட்டப்பட்டது.
ஆகோ ஸ்டுடியோஸ் இதற்கு முன்பாக “கனவுகள் விற்பவன்”, “முதிர்க்கன்னி”, சென்னை Bachelors  song  போன்ற  படைப்புகளை வெளியிட்டுள்ளது.

இக்குறும்படமானது ஆனந்த விகடனில் “சொல்வனம்” பகுதியில்   வெளி வந்த கவிஞர் சூ. சிவராமனின் “அவனின் குழந்தைகள்” என்ற கவிதையினை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டது.

இக்குறும்படத்தை புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கியுள்ளார். இவர் சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் பேராசியராக பணி புரிந்து வருகிறார்.

ஒளிப்பதிவு – கார்த்திக் பாஸ்கர்
எடிட்டிங்  – வினோத் குமரன்
இசை – கெயின் W  சித்தார்த்
கதை – கவிஞர் சூ. சிவராமன்
இசை கோர்ப்பு – டோனி பிரிட்டோ
இதில் பாண்டியன் நன்மாறன், பேபி பிரசன்னா, பேபி ஈஸ்வரி மற்றும் சுமித்ரா ராஜேந்திரன் நடித்துள்ளனர்.
தயரிப்பாளர்கள் பிரபு வெங்கடாசலம், ராம், capt A ஆனந்த், புஷ்பநாதன்
இக்குறும்படமானது கேபிள் சங்கர் entertainment  மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.
எங்களின் குறும்படத்தினை உங்களின் இணைய தளத்தினில் பகிருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

Related Images: