தமிழ்சினிமாவில் தற்போது `பார்ட்2` எடுக்கும் பைத்தியக்காரத்தனம் தலைவிரித்தாடும் நேரம். முதல் படத்தை துவங்கும் முன்பே அப்படத்தின் பார்ட்2` வை அறிவித்துவிட்டே ஆரம்பிக்கிறார்கள். அந்த வகையறாக்களில் கடந்த இரு வருடங்களாகவே `சண்டக்கோழி பார்ட்2` எடுக்கப்படவிருப்பதாக விஷால் மற்றும் லிங்குவால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்னால் படப்பிடிப்பு தேதிகளும் இறுதி செய்யப்பட்டன.
இந்நிலையில் கொஞ்சம் பெரிய சம்பளத்துக்கு ஆசைப்பட்டு, லிங்கு நடிகர் அல்லு அர்ஜுனை ஹீரோவாக வைத்து தெலுங்குப்படம் ஒன்றை இயக்கிவிட்டு அப்புறம் சாவகாசமாக `சண்டைக்கோழிபார்ட்2`வை இயக்கத்திட்டமிட, கொந்தளித்துவிட்டார் விஷால்.
`என்னப்பாத்தா வேல வெட்டி இல்லாதவன் மாதிரி தெரியுதா? இவுக வர்ற நேரத்துக்கு நாங்க நடிச்சித்தரணுமா? என்று ஆவேசப்பட்டு எழுதத்தகாத வார்த்தைகளால் லிங்குவை ஏசி வருகிறாராம்.