சினிமாவோடு நிஜ வாழ்விலும் காதலர்களாக இருந்து பிறகு பிரிந்துபோன சிம்புவும்-நயன்தாராவும் காதலர் தினத்தன்று மாலையும் கழுத்துமாக அனைவருக்கும் காட்சியளித்தார்கள். சென்னை நகரெங்கும் காதலர் தினத்தன்று இவர்கள் மணமக்களாக நிற்பது போல போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

சிம்பு-நயன்தாரா காதல் முறிவுக்கு பிறகு எந்த படங்களிலும் சேர்ந்து நடிக்காத இருவரும், தற்போது ‘இது நம்ம ஆளு’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடப்பதுபோன்ற ஒரு காட்சி இருக்கிறது. அதைத் தான் இது நம்ம ஆளு பாண்டிராஜ்  போஸ்டராக்கி காதலர் தின பப்ளிசிட்டி தேடிக் கொண்டார்.

சிம்புவின் தம்பி குறளரசன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அடுத்த மாதம் இப்படம் வெளியாகவிருக்கிறது. பாடல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆண்ட்ரியாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து அடுத்ததா சிம்புவையும் ஆண்ட்ரியாவையும் இதே போன்று போட்டோ போட்டு பப்ளிசிட்டியை மேலும் கூட்டினாலும் கூட்டுவார்கள். யார் கண்டது.

 

Related Images: