கேடி பில்லா கில்லாடி ரங்கா’ நாயகி ரெஜினா அதற்குப் பின்னும் சரியான வெற்றிகள் கிடைக்காமல் வேறு வழியின்றி கவர்ச்சி ஹீரோயின் லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டிருக்கிறார். ஆனாலும் சோர்ந்து விடாத அவர்.பொது நிகழ்ச்சிகளுக்கும் கவர்ச்சி உடைகளில் வருகிறார்.
இதற்கிடையில் அவரிடம் காதல் வலை வீச ஆரம்பித்திருக்கிறார் டோலிவுட் ஹீரோ சாய் தரம் தேஜ், சமீபத்தில் ஓப்பனாக ஸ்டேட்மென்ட் விட்டிருக்கும் தரம் தேஜ் தான் ரெஜினாவை காதலிப்பதாகவும் அவரை மணக்க விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். தரம் தேஜ் அவரை தனது தாயிடம் அழைத்துச் சென்று ஆசி பெற்று மணக்க ஆசைப்படுகிறாராம்.
அதைக்கேட்டு ஒரே ஷாக் ஆகிவிட்டாராம் ரெஜினா. உடனடியாக சாய் தரமின் திருமண விருப்ப ஸ்டேட்மென்ட்டை நிராகரித்து பதில் ஸ்டேட்மண்ட் விட்டிருக்கிறார். ‘நிறைய படங்களில் நடிக்கும் எண்ணத்துடன் இருக்கும் ரெஜினா தற்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணத்தில் இல்லை.
தரம் தேஜ், காதலை எல்லாம் சிம்புத் தம்பி மாதிரி பப்ளிக்கா சொல்லி ஓ.கே. பண்ண முடியாதுன்னு தெரியாதா பாஸ் உங்களுக்கு. டேட்டிங், மீட்டிங், பார்ட்டிகள் என்று ஜவ்வாக இழுத்து கடைசியாக செட்டிலாவது தான் பாஸ் காதல். அந்த ரூட்ல சைலன்ட்டா ட்ரை பண்ணுங்க.