ஏ.எம்.ரத்னத்தின் தயாரிப்பு நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் (வீரம் தவிர) ஆகிய படங்களில் நடித்த அஜித், அடுத்தபடியாக பில்லா, ஆரம்பம் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் சோழர் காலத்து வரலாற்றுக் கதையில் நடிப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய்யின் புலி படு சொதப்பலாக அமைந்ததையடுத்து சரித்திரப் படங்கள் நமக்குத் தேவையா என்று அஜித்தும் நினைக்க ஆரம்பித்துவிட்டாராம்.
மேலும் வீரம், வேதாளம் என சிவா இயக்கிய இரண்டு படங்களுமே ஹிட்டாக அமைந்ததால் தான் நடிக்கும் புதிய படத்தை இயக்கும் வாய்ப்பினையும் சிவாவிற்கே கொடுத்துள்ளார் அஜித். அஜித்தின் புதிய படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்ட பட்ஜெட் டில் தயாரிக்கிறது. இப்போதே அதற்கான லொகேசன்கள், நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் வேலைகள் ஆரம்பமாகிவிட்டனவாம்.
படத்துக்காக அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளாமல் சில மாதங்களிலேயே படத்தை எடுத்து முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். பட்ஜெட் செலவு மிச்சமாகும். ஆனால் அஜித் சிவா தொடர்ந்து இணையும் இந்தப் படம் சிவாவின் பழைய பாணி கமர்ஷியல் ஐட்டங்களை மட்டும் நம்பியிருக்கும். எனவே பழைய படங்கள் ஏதாவது ஒன்றின் ரீமேக் போல கதை அமையவும் நிறைய வாய்ப்பிருக்கிறது..