தமிழக மக்கள் அனைவரையும் கடந்த சில பல தினங்களாக குழப்பி, தானும் குழம்பி ஒருவழியாக மக்கள் நலக் கூட்டணியில் தன்னை இணைத்துக்கொண்டு 124 சீட்டுக்களைக் கைப்பற்றியிருக்கிறார் கேப்டன்.
இத்தனை நாட்களும் முதல்வர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிப்பது சட்டமன்ற மரபு ஆகாது என்று முழங்கிவந்த மக்கு நலக்கூட்டணியினர் கொஞ்சமும் வெட்கமின்றி விசயகாந்தை முதல்வர் என்று அறிவித்து கிடைக்காத பதவிக்காகவே தாங்கள் கருணாநிதியையும் செயலலிதாவையும் மிஞ்சியவர்கள் என்று நிரூபித்துவிட்டனர்.
இப்போதைய நிலவரப்படி மேற்படி மக்கு நலக்கூட்டணி முடிவானவுடன் 234 தொகுதியிலும் ஒரு மின்னல்வேக சர்வே மேற்கொண்டதில் கேப்டன் 123 தொகுதியிலும் மற்ற நால்வரும் 109 தொகுதியிலும் வெற்றி பெற்று விபரீதமாக ஆட்சி அமைப்பார்கள் என்றும் எதிர் அணிகளில் கருணா ,ஜெயா தவிர அனைவரும் டெபாஸிட் இழப்பார்கள் என்றும் முடிவுகள் வருகின்றன.
ஸோ மே’19 முதல்வர் பதவியேற்கும் விஜயகாந்தின் முதல் கையெழுத்து ‘குவார்ட்டர் எடு கொண்டாடு’ என்பதாகத்தானே இருக்கும். வாழ்க மக்குநலக்கூட்டணி.