ஹன்சிகா நடிக்கும் உயிரே உயிரேன்னு பேர் இருக்கும் படத்தின் இயக்குனர் ராஜ சேகர், ராஜ சேகர்னு ஒருத்தர். அவர் தான் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது உயிரே உயிரேன்னு சொல்கிற மாதிரி பேசியிருக்கிறார்.
இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றுக்காக அதிகாலை நாலு மணிக்கு அலப்பி என்ற அழகான லொகேஷனுக்கு வந்துவிட்டார்களாம். அதற்கு முன்பே ஸ்பாட்டில் ஹன்சிகா வித் மேக்கப் ரெடி! சுழித்து ஓடும் ஆறு. அந்த ஆற்றின் அடி ஆழத்தில் மரத்தடுப்பு அமைத்து அதில் தண்ணீருக்கு கீழேயே ஒரு மேடையும் அமைத்துவிட்டார்கள். எல்லாம் முன் கூட்டியே செய்த ஏற்பாடு.
கேமரா திரையில் பார்த்தால் அந்த ஆற்றில் ஓடும் தண்ணீரின் மீது ஹீரோயின் ஹன்சிகாவும் ஹீரோ சித்துவும் நடந்து வருவது போல தோற்றம் தரும். ஆனால் ஹன்சிகாவின் உதவியாளர், “ஏன்ங்க… இப்படியொரு ஆபத்தான செட்டப்பா?” என்று அலறியதுடன், “மர மேடை தண்ணிக்குள்ள இருக்கு. அந்த லிமிட் தெரியாம நடந்து போய் தண்ணிக்குள்ள விழுந்துட்டா என்னாகும்? லாங் ஷாட் என்பதால் யாரும் அருகில் கூட இருக்க மாட்டாங்களே… ?” என்றெல்லாம் பயம் காட்ட ஆரம்பித்துவிட்டாராம்.
“முதல்ல நீங்க இந்த இடத்தை விட்டு கிளம்புங்க” என்று அந்த உதவியாளரை துரத்திவிட்டாராம் ஹன்சிகா. “நம்மை சுற்றி நெகட்டிவ் வைப்ரேஷன் இருந்தாலே ஒரு வேலையும் நடக்காது” என்று கூறியவர், தைரியமாக அந்த ஷாட்டில் நடித்துக் கொடுத்தாராம். இது போல டைப் டைப்பாக ஹன்சிகா புகழ் பாடும் சம்பவங்களை வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ராஜசேகர்.
இதுமாதிரி பெரும்பாலான ஹீரோ ஹீரோயின்கள் ரிஸ்க் எடுத்து நடிப்பவர்கள் தானே என்று ஆச்சரியப்படாமலே பார்ப்பவர்கள் சொல்கிறார்கள் இயக்குனர் அடுத்து ஒரு முழு நீள ஹீரோயின் சப்ஜெக்ட் கைவசம் வைத்திருக்கிறாராம். இந்தப் படம் முடிந்ததும் அந்தப் படத்திற்கும் ஹன்சிகாவையே கமிட் செய்யவே இப்படிப் புகழ் பாடுகிறாராம்.