63 ஆவது தேசியதிரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. மாநில மொழிப் படங்கள் வரிசையில், சிறந்த தமிழ்ப்படமாக விசாரணை படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. காஞ்சே சிறந்த தெலுங்குப் படத்துக்கான விருது பெற்றிருக்கிறது.
சிறந்த எடிட்டருக்கான விருதினை மறைந்த கிஷோரும், சிறந்த துணைநடிகருக்கான விருதினை சமுத்திரகனிக்கும் விசாரணை படத்திற்காக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிறந்த படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றது தமிழ் படமான விசாரணை!
சிறந்த பின்னணி இசைக்கான விருது தாரைதப்பட்டை படத்திற்காக இளையராஜாவிற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்பெஷல் ஜூரி விருதினை இறுதிச் சுற்று படத்திற்காக நாக் அவுட் நாயகி ரித்திகா சிங் பெறுகிறார்.
தவிர, சிறந்தநடிகராக அமிதாப்பச்சன் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். கடந்தஆண்டு வெளியான ‘பிக்கு’ படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது. தந்தை மகள் பாசத்தை மையமாகக் கொண்ட அந்தப் படத்தில் தந்தையாக நடித்து இந்த விருதைப் பெற்றிருக்கிறார்.
சிறந்தநடிகையாக கங்கனாரணாவத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தனுவெட்ஸ் ‘மனு ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடித்தமைக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது.
சிறந்தஇயக்குநர் விருது சஞ்சய் லீலா பன்சாலிக்குச் சென்றிருக்கிறது. பஜிராவ் மஸ்தானி படத்தை இயக்கியதற்காக அவருக்கு இந்தவிருது கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தியஅளவில் மிகப்பெரிய எதிர்பர்ப்பை ஏற்படுத்தி மிகப்பெரிய வரவேற்பையும் பெற்ற பாகுபலி, 2015ஆம் ஆண்டின் சிறந்தபடமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் ஆகிய விருதுகளை இந்திப்படங்கள் பெற்றுவிட்டாலும் சிறந்த படமாக ஒரு தென்னிந்தியப்படம் வந்திருக்கிறது.