வேதாளம் பட இயக்குனர் சிவா அஜித்துக்கு அடுத்த கதையை ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார். தனது புதிய கதையில் ஒரு பாதி கதையில் அஜீத் நிகழ்கால தோற்றத்திலும், மீதி பாதி கதையில் வரலாற்று சம்பவங்களை உள்ளடக்கிய வீரனாகவும் காட்டலாம் என்று நினைத்திருக்கிறார்.
அதாவது ‘மஹதீரா’ என்றொரு படம் வந்ததல்லவா? கிட்டதட்ட அதைப்போல. இதை கேட்டு பலமாக யோசித்த அஜீத், “‘பாகுபலி’ படத்திற்கு பிறகு நாமும் அப்படியொரு படம் செய்தால், நிச்சயம் ஒரு ஒப்பீடு வரும். முழுமையாக அதை செய்யாவிட்டால், அதுவே தப்பாக முடியவும் வாய்ப்புண்டு. எனவே பாதி வரலாறு அம்சங்களுடன் கூடிய கதை என்பதே ரிஸ்க்தான். அதனால் இப்போதைக்கு வரலாற்றுக் கதை வேண்டாம்” என்று கூறிவிட்டாராம்.
என்னடா இது அஜித் கதை விஷயத்தில் இப்படியெல்லாம் சிந்திச்சு முடிவெடுக்க ஆரம்பிச்சுடாரேன்னு ரசிகர்கள் சர்ப்ரைஸ் ஆக, இயக்குனர் விஷ்ணுவர்த்தன் மட்டும் டென்ஷன் ஆகிவிட்டாராம். ஏனென்றால் அவர் அஜீத்தை வைத்து ராஜராஜ சோழன் கதையை எடுக்க ஸ்கிரிப்ட் செய்து வருபவர்.
சரியான முடிவு தான் அஜித் எடுத்திருப்பது என்கிறது கோலிவுட் வட்டாரம். எனவே விஷ்ணு வர்த்தனின் கதை பில்லா – 3 மாதிரி ஏதாவது புதுசாகக் கிளம்பும்.