தமிழுக்குப் பெருமை சேர்ப்பதில் இளைய இசையமைப்பாளர்களுக்கு நிகர் அவர்களே. சிம்புவோடு சேர்ந்து பீப் பாடலுக்கு இசையமைத்து அப்படி ஒரு புண்ணியத்தை புதிதாய் வாங்கிக் கட்டிய இளைய இசைப் புயல் அனிருத், சமீபத்தில் கியூபா சென்றாராம். அங்கு அவர் இசையைக் கேட்டு தெறித்து ஓடிய மக்களைத் தேடி அவர் அங்கே சுற்றித் திரிந்த போது தமிழுக்கு ஒரு புதிய வார்த்தையைக் கண்டுபிடித்து கொண்டு வந்திருக்கிறார்.
க்யூபா நாட்டில் ஒருவருக்கு ஒருவர் சந்திக்கும் போது கூறும் வார்த்தைதான் ‘ஹோலா அமிகோ’ என்பது. அந்தச் சொல்லை தமிழ்ப்படத்துக்கான பாடலொன்றில் பயன்படுத்தியிருக்கிறாராம் அனிருத். சாய்பரத் இயக்கத்தில், ஹிரிஷிகேஷ், சஞ்சிதா நடித்துள்ள ‘ரம்’ படத்துக்காக அனிருத் இசை அமைத்து உள்ள பாடல் ஒன்று ‘ ஹோலா அமிகோ’ என்ற புரியாத வார்த்தையில் வருகிரது.