‘இந்திய சினிமாவில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக’ கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் ஹென்றி லாங்லாயிஸ் திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது. லாங்லாயிஸ் என்கிற பிரான்ஸ் சினிமா மேதையின் நினைவாக இவ்விருது வழங்கப்படுகிறது. லாங்லாயிஸ் சினிமா பிரதிகளை பாதுகாக்கும் தொழில்நுட்பத்தின் முன்னோடியான ஆவணக்காப்பாளராக அறியப்படுகிறார்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் கமலுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து கமல்ஹாசன் தனது டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“பாரீஸ் நகரில் ஹென்றி லாங்லாயிஸ் விருதைப் பெற்றேன். லாங்லாயிஸ் பற்றி என் குரு அனந்து சார் மூலம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த விருது கிடைத்த செய்தியை கேட்க அவர் இருந்திருக்கவேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கமல் ஸார், நீங்க ஆஸ்கார் பக்கமெல்லாம் போகவேண்டாம். உலகச் சினிமாவின் முதன்மைத் தளங்களுள் ஒன்றான பிரான்ஸ் சினிமா உலகம் உங்களின் படைப்புகளை கவனிக்கிறது, அங்கீகரிக்கிறது. அது உண்மையான கலைஞனாக மிளிர, நீங்கள் எடுத்து வைக்கப் போகும் ஒவ்வொரு அடிக்கும் உங்களுக்கு ஒரு விருது தரும்.