இது போதவே போதாது
……” சமூக நீதிக்காகத்தான் இட ஒதுக்கீட்டை அம்பேத்கர் கொண்டுவந்தார் ”…
( ஆம் உண்மைதான் ; ஆனால் நடப்பது ! )
……” இட ஒதுக்கீடு கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்பதை உறுதியாகச் சொல்லுகிறேன். இட ஒதுக்கீடு என்பது தலித் உள்ளிட்ட சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள மக்களின் உரிமை . அதை யாரும் பறிக்க முடியாது.
…..நான் ஏற்கனவே கூறியதுபோல் அம்பேத்கரே மீண்டும் தோன்றினாலும் இட ஒதுக்கீட்டை பறிக்க முடியாது “ என்று அம்பேத்கர் நினைவிட அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேசினார் – தி இந்து , 22-3-2016 .
பிரதமர் மோடியின் பேச்சில் கூர்ந்து நோக்கவேண்டியவைகள் (1) சமூக நீதிக்காகத்தான் ; (2) தலித் உள்ளிட்ட சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள மக்களின் உரிமை ; அதை யாரும் பறிக்க முடியாது .
அதைப் பறிக்க யார் வருவது ? .
அதை என்றும் காப்பாளனாகத் தன்னை நனவிலியாக முன்னிறுத்துவதேன் ?
“ அம்பேத்கர் மீண்டும் தோன்றி வந்தாலும் முடியாது ” என்ற கூற்றின் அடியில் ஓடும் எண்ணம் என்ன ? இடஒதுக்கீட்டுக் காப்பாளன் “ நமோ “ ; அதாவது , குறிப்பாக கி.பி 2000 –ற்கான தலித்தின் நவீன காப்பாளர் “ நமோ “ என்பதாகிறது . நமோ இந்த நூற்றாண்டின் இட ஒதுக்கீட்டின் அடையாளமாகிறது. சற்று யோசித்தால் , நமோவின் இயங்கும் திசை அச்சமாக இருக்கிறது . இதை அறிய ஒரு அடிப்படையான கேள்வியைக் கேட்டுக்கொள்ளலாம் .
நேருவின் இடத்தில் படேலை வைக்க எடுத்த அரசியல் நடவடிக்கையை நினைவு கூறும் நேரமிது ; இப்போது ‘ அம்பேத்கரே வந்தாலும் இட ஒதுக்கீட்டைத் தடுக்க முடியாது ‘ . ‘ நானிருக்கப் பயமேன் ‘ என நனவிலியாகக் கூறுகிறார் .
இட ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் வராது என்று உறுதியாகச் சொல்கிறது . இது மோடியின் தன்னிலையாகிறது . எது ? . இட ஒதுக்கீடு என்பது நிரந்தரம் / மாறாதது / அம்பேத்கர் திரும்பினாலும் மாற்ற முடியாது என்பது நனவிலியாகும் ஆசையாகும் . ஏன் இப்போது இவ்வளவு அக்கறை ?
அம்பேத்கர் திரும்பினாலும் முடியாது என்பது கற்பனை ஒழுங்கு ( imaginary order ) . சாத்தியமற்ற ஒன்றை ஏன் முன்னிறுத்த வேண்டும் ?
ஒன்றுதான் நினைவிற்கு வருகிறது . காங்கிரசால் புறக்கணிக்கப்பட்ட படேல் , போஸ் ; இப்போது அம்பேத்கர் வருகிறார் .
சமகால அரசியலில் , கலாச்சாரம் , மொழி சிம்பாலிக்காக ( symbolic ) ; மோடியின் நனவிலி ஆசை (unconscious desire ) மேற்கூறிய சிம்பாலிக் அதிகாரத்தை ; படேல் , போஸ், அம்பேத்கர் போன்றோரின் வழித்தோன்றலாக , பாதுகாவலராக ; வரலாற்று நீடிப்பாக , தன்னை அடையாளப் படுத்துகிறார் மக்களிடம் .
அவரின் நனவிலி ஆசையை அவரின் மனசுக்குள் சென்று அறிய வேண்டியதில்லை . அவரின் சொல்லாடல்களும் அதன் விளைவுகளும் ( effects ) , அதனை நடைமுறைப்படுத்தும் நினைவு விழாக்களும் , விளம்பரமும் ; தன்னை அவைகளுடன் நேரடியாக , மறைமுகமாக அடையாளப் படுத்திக்கொள்வதுதான் ( இன்றைய காவலனாக) அவரின் நனவிலி ஆசையின் உந்தலுக்கான சாட்சி .
இட ஒதுக்கீடு தனித்துவமானது ( entity ) அல்ல . அது சாதிய சமூகத்தின் பகுதி மட்டுமே . அதுவும் ஒரு இடைக்கால சரிசெய்தல் மட்டும்தான் .
முழுமை என்பது சாதியம் . அந்தத் தீட்டை / Evil – ஐ ஒழிக்க , குடியுரிமையை ( திருமணம் பண்ணும் உரிமையை ) நிலைநாட்ட , ஒரு சமூகப் புரட்சி தேவை / உண்மையான சமூக ஜனநாயகப் புரட்சி தேவை .
அதை விடுத்து இந்தப் பாராளுமன்றத்தின் ஜனாதிபதி , முதல் மந்திரி , இட ஒதுக்கீடு , போன்றவற்றிற்கு உழைப்பது , பேசுவது , அதுவும் காத்திரமாக எழுதுவதும் இந்தப் பாராளுமன்ற ஜனநாயகம் காக்கத்தான் பயன்படும் . நடைபெறும் மாற்றமெல்லாம் பகுதியிலேதான் ; முழுமையில் அல்ல . முழுமை இன்னும் வெகு தூரத்தில்.
பாராளுமன்றமுறை நிரந்தரமாகக் கோலோச்ச சாதிய சமூகம் வேண்டும் .
மனுவால் கட்டப்பட்ட சாதியம் அந்தந்த சாதிக்குரிய பாராளுமன்றவாதத்தால் நிரந்தரமான ஒதுக்கிடத்தில் ( Bay ) நங்கூரமிட்டு , சாதியம் நிற்கவைக்கப்பட்டுள்ளது . அவ்வளவுதான் .
க.செ
22 Mar 2016
தேசியவாதம் எதன் நலன் காக்க ?
“ பிறரும் , பிறரின் சொல்லாடல்களும்,
தன்னிலையின் கட்டமைப்பிற்கு முக்கியத்துவமாக உள்ளது .
அது ஒரு சமூக அடையாளத்தை நிறுவுகிறது ” – லெக்கான்
புது டெல்லி . மார்ச்21. 2016- தி இந்து :
“ கருத்து சுதந்திரமும் தேசியவாதமும் இணைந்து இருக்க வேண்டியது அவசியம் ”
– அருண் ஜெட்லி.
யாருக்கு அவசியம் ? ஆளும் கட்சி , ஆளும் வர்க்கத்திற்குத்தானே ?
இந்த சூத்திரம் , கல்வியாளர் , 70 வயது கல்புர்கியை சுட்டுக்கொன்றவர்களின் மனம் கவர்ந்த கட்சி , கருத்து எதுவோ ?
அருண் ஜெட்லி அறியாததா.
ஒரு டிராக்டர் கடனில் மிச்சம் இருந்ததால் போலீஸ் கூட்டணியோடு தமிழ்நாடு விவசாயியை அடித்து நொறுக்கியது யார் சுதந்திரம் ?
சாராயக் கம்பெனி முதலாளி விஜய் மல்லையா கோடிகளில் கடனை வாங்கி விமான சர்வீஸ் நட்த்தி , பின்பு நல்ல விலை வந்தவுடன் விற்றுவிட்டு இங்கிலாந்தில் சுதந்திரமாக உலாவிவர மறைமுக உதவி / அனுமதி அளித்தது யார் ? மல்லையாவுக்கு உள்ள சுதந்திரம் , அதிகாரம் தஞ்சை விவசாயிக்கு இல்லையே !
[ இன்னும் என்னென்ன அவமரியாதைகள் நடந்தாலும் விவசாயிகள் தங்கள் குறுங்குழுவாதம் , சாதிய மதர்ப்பு , ஆணவக் கொலைகளை கைவிட மாட்டார்கள் . அது தாராளவாதக் கருத்தாடல்களுக்கு மட்டுமல்ல ; ஏகத்துவத் தீவிரவாதத்திற்கும் உடன்பாடுதான் . உள்ளதெல்லாம் நட்பு முரண்பாடே ] .
கோடி கோடிகளில் ஊழல் பண்ணி ஓடி ஒளிந்திருக்கும் லலித் மோடிக்கு உதவிய அரச குலப் பெண்மணியும் , வெளியுறவு மந்திரி , “ மனிதாபிமான மந்திரி “ திருமதி சுஸ்மாவும் லலித்திற்கு அளித்த சுதந்திரத்தை கடன் சுமையால் தற்கொலை பண்ணும் விவசாயிகளுக்கு பண்ணவில்லையே ஏன் ?
சாதியத்தால் உயர் கல்விக் கூடங்களில் மாணவர்களின் தற்கொலைக்கு அருண் ஜெட்லி கூறும் கருத்து சுதந்திரம் உதவவில்லையே?
இந்தியாவில் உள்ள சாதியம் இந்திய மக்களை ஒன்றிணையவிடாமல் வைத்துள்ளதே ? அதை ஜெட்லியின் “ கருத்து சுதந்திரமும் தேசியவாதமும் ” உதட்டளவிலான லிப்ஸ்டிக் சுதந்திரம் – காலையில் போட்டுவிட்டு பின் அழித்துக் கொள்ளும் தன்மை – தானே பேசுகிறது . எங்கே போயிற்று ஏகத்துவம் ?
லலித் மோடியின் சொல்லாடல் அரசியலும் , சட்டவாதமும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதல்ல. குடியுரிமை கூட ( திருமணம் உட்பட ) இல்லாத தன்னிலைகளுக்கு, இதை இனியும் சகித்துக் கொள்ளக்கூடாது என்று சொல்வதைக் காட்டிலும் , உரிமைகளை வயித்துப் பிரச்சினையாய்க் காட்டி M L A ; M P , மந்திரி பதவிகளுக்கு ஆளாய் பறக்கிறார்கள் ; பரப்புரை செய்கிறார்கள் . என்ன செய்ய ?
ஆதிக்க சாதிகளின் பலாத்காரமும் வெகு லாவகமாக நடந்து வருகிறது . அத்துடன் , நவீனத்துடன் மதம் , கலை , இலக்கியம் , கருத்தாடல்களிலும் சாதியத்தை மீட்டுருவாக்கும் சுதந்திரம் காக்கப்படுகிறது.
ஜெட்லி இப்படிக் கூறுகிறார் :
“ நம் நாட்டின் நம்பிக்கைகளையும் தத்துவங்களையும் தேசியவாதக் கொள்கைதான் வழிநடத்துகிறது ” .
இயற்கை வளங்கள் கொள்ளை போவதும் ; நவீன தொழில்மயம் , வல்லரசு ஆசை போன்றவற்றால் காலத்திற்கும் தீங்கு பயக்கும் அபாயத்தை – அணு உலை – நவீன வளர்ச்சி என்று கோடி கோடியாய் கொட்டுகிறதே ? .அதுதான் தேசியவாதக் கொள்கை வழிகாட்டியா ? அல்லது வேறயா ? பட்டியல் இடுங்கள் தெரிந்துகொள்கிறோம். இதைவிடுத்து ,
“ நாட்டை சீரழிக்கும் அறைகூவலை அனுமதிக்க முடியாது...” ( மிரட்டல் வேண்டாம் ). நல்லது கனம் மந்திரி அவர்களே.நாங்கள் உங்களுடன் கைகோர்க்கத் தயார் . முதலில் சுய விமர்சனத்தை ஆரம்பியுங்கள். குஜராத் , ராம் ஜென்ம பூமி ,பாரத ரத யாத்திரை etc.. –ம் தொடருங்கள் . கையோடு இப்போது யார் உங்கள் முதல் எதிரி ( நாட்டைச் சீரழிப்பதில் ) என்று அடையாளம் காட்டுங்கள் . புரியும் குற்றங்களைப் பட்டியலிடுங்கள் . உங்கள் மனக் குரலை நிப்பாட்டிவிட்டு சட்டரீதியிலேயே உரையாடலைத் தொடருங்கள் . காத்திருக்கிறோம்.
க.செ
22-3-2016
பி.கு ;
[ ஆணவக்கொலைக்கு தன்னகங்காரம் மட்டுமல்ல . அன்னியரின் சொல்லாடலும் அன்னியரும் சுயத்தைக் கட்ட மிக முக்கியம் . அது பிரதானமாக ஒரு சமூக அடையாளத்தை நிறுவ அத்தியாவசியம் . இந்த அத்தியாவசியமே , இதரரின் கேலி , எகத்தாளத்தைக் கண்டே , பிரதானமாக ஆணவக்கொலையில் ஈடுபடுகின்றனர் . சுய சாதிக் கௌரவமும் , பிற சாதியிடம் கிடைக்கப்போகும் சுயத்தின் அடையாளமும் எலும்புக் குருத்தில் அச்சமேற்படுத்துகிறது . இந்தக் கருத்தாடல் வெளிப்படையாய் கட்டுடைக்கப்படவில்லை . இது லெக்கானியம் ].