சினிமாவில் பொதுவாகவே ஒரு பழக்கம் உண்டு. மரியாதை நிமித்தமாக சகட்டுமேனிக்கு எல்லாரையும் புகழ்ந்து தள்ளுவார்கள். அதுவும் உடன் நடிப்பவர் பெரிய நடிகர் அல்லது நடிகையாகிவிட்டால் கேட்கவே வேண்டாம். குளிரக் குளிர உச்சியில் ஐஸ் கட்டியே வைப்பது போலிருக்கும் புகழ்ச்சி.
அப்படி சமீபத்தில் ரஜினிகாந்த்தைப் பற்றி புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளியிருப்பவர் ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே. இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி ராதிகா ஆப்தே கூறியதாவது:-
‘‘ரஜினிகாந்துடன் நடிப்பேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவருடன் சேர்ந்து நடிப்பது யாருக்குத்தான் சந்தோஷமாக இருக்காது?. படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளுமே மகிழ்ச்சியாக இருந்தது. என் வாழ்க்கையில் கிடைத்த மிகச்சிறந்த அனுபவமாக இதை கருதுகிறேன். ரஜினிகாந்திடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அவர் எனக்கு பிடித்த ஒரு அற்புதமான மனிதர்.”