இந்திய அரசின் பத்ம விபூஷன் விருதுகள் ஆண்டுதோறும், அரசை எதிர்த்து வாய் பேசாத அல்லது அரசுக்கு ஜால்ரா போடுகிற அல்லது கூழைக் கும்பிடு போடுகிற அப்புறம் கொஞ்சூண்டு நல்ல படைப்பாளிகளாய் இருக்கிற அல்லது சாதனைகள் செய்த ஏதாவது நாலு பேருக்கு வழங்கப்படும்.
112 பேரை இந்த வருடம்2016-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்து இவர்களில் முதற்கட்டமாக 56 பேருக்கு கடந்த மாதம் 28-ம் தேதி விருதுகள் வழங்கப்பட்டன.
மீதமுள்ள 56 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது. விழாவில், இதற்கு மட்டுமே பதவியில் இருப்பது போல, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு, விருதுகளை வழங்கினார். நடிகர் ரஜினிகாந்த், சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத் தலைவர் டாக்டர் வி.சாந்தா ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருதுகளை வழங்கி கவுரவித்தார். ரஜினிகாந்த் பாரம்பரிய உடையில் வந்து விருதை பெற்றுக்கொண்டார். விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா பத்ம பூஷண் விருது பெற்றார்.
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கோர்ட்டையே அவமதித்து தன்னுடைய உலக கான்பரன்ஸை யமுனை ஆற்றின் கரையில் நடத்தி முடித்த கையோடு வந்து பத்ம பூஷனை வாங்கிச் சென்றார்.